அமீரக செய்திகள்

அமீரக அரசின் அடுத்த உத்தரவு..!!! ரெசிடென்ஸி விசா வைத்திருப்பவர்களும் அமீரகத்திற்குள் நுழைய தடை..!!!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் பல முயற்சிகளையும் சட்ட திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இதில் மற்றுமொரு நடவடிக்கையாக, மார்ச் 19, வியாழக்கிழமை மதியம் முதல் இரண்டு வாரங்களுக்கு, தற்போது நாட்டிற்கு வெளியே உள்ள செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸி விசாக்களை வைத்திருப்பவர்கள், தற்பொழுது நாட்டிற்கு வெளியே இருந்தால் அவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

தற்போது அவர்களின் பிறந்த நாடுகளில் உள்ளவர்கள்

தற்போது தங்கள் சொந்த நாடுகளில் உள்ளவர்கள் தேவையான அனைத்து ஆதரவிற்கும் அந்தந்த நாடுகளில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பணியகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதை பற்றிய கூடுதலான விபரங்களையும் அங்கு தெரிந்து கொள்ளலாம்.

தற்போது வணிகத்திற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே உள்ளவர்கள்

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வணிகத்திற்காக வெளிநாடு சென்றிருப்பவர்கள் தங்கள் முதலாளிகளையும், தாங்கள் தற்பொழுது இருக்கும் நாடுகளில் உள்ள அமீரக தூதரகங்களையும் தொடர்பு கொள்ள வேண்டும்.

தற்போது விடுமுறையில் இருப்பவர்கள்

தற்போது விடுமுறையில் இருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஆதரவிற்கும் விடுமுறைக்காக சென்றிருக்கும் நாடுகளில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பணியகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

தொடர்பு கொள்ளும் முறை

அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA-Federal Authority for Identity and Citizenship) இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் பின்வரும் தொடர்பு எண்கள் வழியாக ICA உடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு விவரங்கள் பெறலாம் எனக் கூறியுள்ளது.

போன் : 02 3128867 or 02 3128865
மொபைல் : 0501066099
ஈமெயில் : [email protected]
ஃபேக்ஸ் : 025543883

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!