UAE : எமிரேட்ஸ் ஐடி காலாவதியானாலும் சந்தாதாரர்களின் மொபைல் சேவை துண்டிக்கப்பட மாட்டாது..!!! TRA அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் “STAY HOME” என்ற முயற்சிக்கு ஆதரவாக, அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) உள்ளிட்ட துணை ஆவணங்களின் காலாவதி காரணமாக சந்தாதாரர்களின் மொபைல் சேவைகளை இடைநிறுத்துவதையும் துண்டிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
In support of “La tsheelon ham” initiative and “#StayHome” initiative,
TRA issued a circular to the telecommunications companies to put on hold the suspension and disconnection of mobile services due to the expiry of the supporting documents and the Emirates ID pic.twitter.com/JEjjLlpt6g
— هيئة تنظيم الاتصالات (@TheUAETRA) March 27, 2020
இது பற்றி TRA தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலாவதியான அடையாள ஆவணங்களைக் கொண்ட சந்தாதாரர்களின் மொபைல் சேவை துண்டிக்கப்படவோ அல்லது இடைநீக்கம் செய்யப்பாடவோ மாட்டாது. மேலும் அவர்கள் சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தங்களின் சேவையை புதுப்பிக்க ஆவணங்களை வழங்க வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டு வருகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும், வாடிக்கையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் மகிழ்ச்சி அடைவதற்கும் மேலும் நாட்டின் அனைத்து துறைகளையும் ஆதரிக்கும் வண்ணம் முயற்சிகளைத் தொடங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை TRA உறுதி செய்துள்ளது.