இந்தியா : அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா விசா ரத்து…!! ஏப்ரல் வரை தடை நீடிக்கும் என அறிவிப்பு..!!!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது இந்திய அரசு. ஏற்கெனவே 8 நாடுகளுக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
மேலும் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தனிமைப்படுத்தப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை மார்ச் 13 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் அளிக்கும் விசா, எம்பிளாய்மென்ட் மற்றும் ப்ரொஜெக்ட்டிற்கான விசா, டிப்ளமேடிக் விசாக்கள் ஆகியவை இவற்றுள் விதிவிலக்காகும்.
Visa restrictions issued by Bureau of Immigration (BOI) after meeting of GoM on #COVID19 today.#SwasthaBharat #HelpUsToHelpYou @PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @MIB_India @PIB_India @DG_PIB @MEAIndia @MoCA_GoI @shipmin_india @tourismgoi pic.twitter.com/dI8tNxihLW
— Ministry of Health (@MoHFW_INDIA) March 11, 2020
இந்திய அரசு இது பற்றி மேலும் கூறுகையில் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தங்கி இருந்த பயணிகள் (இந்தியர்கள் உட்பட) இந்தியாவிற்கு வரும்போது குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியர்கள் அனைவரும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.