அமீரக செய்திகள்
துபாயில் இரு வாரங்களுக்கு எவை மூடப்பட்டிருக்கும்..??? எவை திறக்கப்பட்டிருக்கும்…???

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து அதிகாரிகள் அறிவித்த தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க, துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை வணிக நிறுவனங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு உத்தரவிட்டது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள பொது இடங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகள் ஆகியவை இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளன. ஆனாலும், சில கடைகளுக்கு இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தில் எந்தெந்த கடைகள் திறந்திருக்கும் மற்றும் எந்த கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பதை கீழே காணலாம்.
திறந்திருப்பவை
- மளிகை கடை
- பல்பொருள் அங்காடிகள்
- கூட்டுறவு சங்கங்கள்
- மருந்தகங்கள்
- பேக்கரிகள்
- கார் பட்டறைகள்
- சலவை செய்யும் கடைகள்
- தொழில்நுட்ப மற்றும் மின் சேவை வழங்குநர்கள்
- வங்கிகள்
- கிளினிக்குகள்
மூடப்பட்டிருப்பவை
- சந்தைகளில், தெருக்களில் மற்றும் ஷாப்பிங் மால்களில் உள்ள வணிக விற்பனை நிலையங்கள்
- மீன், இறைச்சி மற்றும் காய்கறி சந்தைகள் (மொத்த விற்பனையாளர்களைத் தவிர)
- ஷிஷா கஃபேக்கள் (Shisha cafes)
- ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள்
- தீம் பூங்காக்கள் கேளிக்கை மையங்கள் மற்றும் மின்னணு விளையாட்டு விற்பனை நிலையங்கள்
- சினிமாக்கள்
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சலூன் கடைகள்
- மசாஜ் பார்லர்கள் மற்றும் ஸ்பாக்கள்
விதிவிலக்கானவை
- உணவகங்கள் (Restaurant) மூடப்பட்டுள்ளன. ஆனால் பொதுமக்கள் தேவைப்பட்டால், உணவகங்களில் உணவு வாங்கி வீட்டிற்கு எடுத்து செல்லலாம் அல்லது ஹோம் டெலிவரி மூலம் உணவை வீட்டிற்கு வரச்செய்யலாம்.
- ஹோட்டல் மற்றும் ஹோட்டல் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் உள்ள உணவகங்கள் தங்கள் விருந்தினர்களுக்கு சேவை செய்யலாம் மற்றும் ஹோம் டெலிவரி செய்யலாம்..