UAE கொரோனா அப்டேட் (ஏப்ரல் 11, 2020) : பாதிக்கப்பட்டோர் 376 பேர்..!!! மொத்த எண்ணிக்கை 3,736 பேர்..!!! நான்கு பேர்பலி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11, 2020) புதிதாக 376 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதய நிலவரப்படி, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,736 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
مستجدات الوضع الصحي والحالات المرتبطة بفيروس #كوفيد19 في دولة #الإمارات
السبت 11 إبريل 2020The latest developments on Coronavirus (Covid-19) in the #UAE pic.twitter.com/D76gS7y59n
— UAEGov (@uaegov) April 11, 2020
இன்று மட்டும் புதிதாக நான்கு பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவிற்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்றைய நாளில் மட்டும் 170 பேர் குணமடைந்துள்ளதாக அமைச்சகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.