அமீரக செய்திகள்

“LULU” உட்பட ஆறு Hand Sanitiser பிராண்டுகள் விற்கத் தடை..!!! துபாய் முனிசிபாலிடி அறிவிப்பு..!!!

உலகில் கொரோனாவின் பாதிப்பையொட்டி, சானிடைசர் (Sanitiser) பயன்படுத்தும் பழக்கம் அனைவருக்கும் வந்துவிட்டது. பெரும்பாலும் மருத்துவமனைகள் மற்றும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்பட்ட சானிடைசர் தற்சமயம் கொரோனா அச்சத்தையொட்டி பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்தத் தொடங்கிவிட்டனர். அனைத்து கடைகளிலும் சானிடைசர் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மக்கள் அனைவரும் அதனை வாங்கி உபயோகிக்கின்றனர். தன் உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க சானிடைசர் வாங்கினால் தற்பொழுது அதுவே உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாகவும் மாற வாய்ப்பாக அமைந்துள்ளது. சில கம்பெனி சானிடைசர்களில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருப்பதாக தற்சமயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் முனிசிபாலிடி (Dubai Municipality), கடைகளில் விற்கப்படும் சானிடைசர்களில் ஆறு சானிடைசர்கள் அங்கீகரிக்கப்பட்ட விபரங்களுக்கு ஒத்துப்போகவில்லை என அவற்றை திரும்பப்பெற்றுள்ளது.

இணக்க சோதனைகள் (conformity tests) மற்றும் ஆய்வக பகுப்பாய்வு (laboratory analysis) நோக்கத்திற்காக தற்பொழுது சந்தையில் விநியோகிக்கப்பட்டு வரும் தயாரிப்புகளிலிருந்து மொத்தம் 102 மாதிரிகள் வெவ்வேறு அளவுகளில் எடுக்கப்பட்டு சோதனைகள் செய்ததில், ஆறு சானிடைசர்களில் மெத்தனால் (methanol) இருப்பதால் அவை அங்கீகரிக்கப்பட்ட விவரக்குறிப்புகளுக்கு ஒத்துப்போகவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மெத்தனால் எனும் வேதிப்பொருளானது ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் கடுமையான வாசனையுடன் கூடிய நிறமற்ற திரவமாகும். இது மிகவும் நச்சுத்தன்மையுடையது மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகும். மேலும் இது நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தலைச்சுற்றல், தலைவலி, தோல் மற்றும் சுவாச மண்டலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளது. எனவே, இந்த தயாரிப்புகள் உடனடியாக திரும்பப்பெறப்பட்டதுடன் இந்த தயாரிப்புகள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்ட சானிடைசர்கள்:

  1. LULU Hand Sanitizer – 500ml
  2. COSMO Hand Sanitizer – 65ml
  3. ZIVA Hand Sanitizer – 250 ml
  4. FEAH Hand Sanitizer – 50ml
  5. AMEYA Isopropyl Alcohol – 70ml
  6. LULU Hand Sanitizer – 250ML

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!