இந்திய செய்திகள்

இந்தியாவில் 4000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு..!! இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்தது..!!

இந்திய நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்றுடன் 4000ஐ கடந்தது. உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸிற்கு இதுவரையில் 1.2 மில்லியனுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து இன்று வரை மொத்தம் 4000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் தற்போது 100ஐ கடந்துள்ளது.

இதில் தற்போது வரை பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 3666 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 292 ஆகவும், மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆகவும் உள்ளது. இதன் படி மொத்தமாக 4066 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மத்திய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா 781 பேருடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 571 பேருடன் இரண்டாம் இடத்திலும், டெல்லி 503 பேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இதில் இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட கேரள மாநிலத்தில் 314 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!