கொரோனா எதிரொலி : மே மாதம் இறுதி வரையிலும் ஊரடங்கு நீட்டிப்பு..!!! குவைத் அரசாங்கம் தகவல்.!!!
குவைத் நாட்டில் கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தற்பொழுது மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அமலில் இருக்கும் ஊரடங்கானது ஏப்ரல் 26 ம் தேதி முடிவடையக் கூடிய நிலையில், ஊரடங்கு உத்தரவை மே மாதம் 28 ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மே மாதம் இறுதி வரையிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருக்கும் நேரம் 16 மணி நேரமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையிலும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Kuwait gov’t extends measures against coronavirus https://t.co/CH0iNimK0j #KUNA #KUWAIT pic.twitter.com/0GDhas3iE0
— Kuwait News Agency – English Feed (@kuna_en) April 20, 2020
கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு அமலில் இருக்கும் நேரங்களில் விதிகளை மீறும் நபர்களை பொதுவெளியில் அடையாளப்படுத்தும் விதமாக ‘Name and Shame’ என்றதன் அடிப்படையில், அவர்களின் பெயர் மற்றும் புகைப்படம் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்படும் எனவும் அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.