Health Card வேலிடிட்டி முடிந்திருந்தாலும் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்கம்போல் மருத்துவ சேவையை பெறலாம்..!! துபாய் DHA அசத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சுகாதார ஆணையம் (DHA) குடியிருப்பாளர்களின் காலாவதியான மருத்துவ காப்பீட்டிற்காக (Medical Insurance) வழங்கப்படும் சுகாதார அட்டை (Health Card) வேலிடிட்டியை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மார்ச் 24, 2020 முதல் அமலுக்கு வருவதாகவும் DHA தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக DHA மருத்துவ சேவை வழங்கக்கூடிய (Healthcare Providers) அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலாவதியான சுகாதார அட்டை கொண்டவர்களும் வழக்கமான மருத்துவ சேவையை பெற முடியும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் காலாவதியானா சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை தடையின்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி DHA மேலும் கூறுகையில், எங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த செயல்முறையை எளிதாக்கி, தேவையான மருத்துவ சேவைகளை தடையின்றி பெறுவதற்கு காலாவதியான சுகாதார அட்டைகளின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் குறிப்பாக கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோயால் ஏற்படும் தற்போதைய சூழ்நிலைகளின் பாதிப்பிலிருந்து குடியிருப்பாளர்களை பாதுகாப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் சமூக உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக DHA சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.