அமீரக செய்திகள்

ரமலானையொட்டி துபாய் மால் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!!

கடந்த வியாழக்கிழமை துபாயில் கொரோனாவிற்கான இயக்கக கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பை தொடர்ந்து, துபாய் மால் (Dubai Mall) வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த மால் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி துபாய் மாலின் அதிகாரபூர்வ ட்விட்டரில், “எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எங்களின் முன்னுரிமையாக உள்ளது. இந்த நேரத்தில், ஏப்ரல் 28 முதல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை துபாய் மால் மீண்டும் திறக்கப்பட்டு உங்களை வரவேற்கும் பொருட்டு நாங்கள் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் கொரோனாவிற்கான இயக்க கட்டுப்பாடுகள் சில முக்கிய வழிமுறைகள் கூறப்பட்டு ரமலானை முன்னிட்டு சற்று தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஷாப்பிங் மால்கள் மீண்டும் திறக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட வயதானவர்களும், 12 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களும் மால்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருந்தது. மாலிற்கு வருகை தரும் நபர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!