அமீரக செய்திகள்

April 4 இரவு 8 மணி முதல் April 5 வரை ரேடாரால் பதியப்பட்ட அபாரதங்கள் ரத்து..!! துபாய் காவல்துறை அறிவிப்பு..!!

துபாயில் சனிக்கிழமை (நேற்று) இரவு 8 மணி முதல் இரு வாரங்களுக்கு 24 மணி நேர சுத்திகரிப்பு திட்டத்தை அறிவித்ததையொட்டி, அனுமதி இல்லாமல் வெளியே வருவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் கேமரா, ரேடார் மற்றும் போலீசாரால் வெளியே வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று வரை ரேடாரால் பதிவு செய்யப்பட்ட, விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கான அபராதம் ரத்து செய்யப்படுவதாக காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் வெளியே வரும் நபர்கள் கட்டாயமாக அரசின் அனுமதி பெற்றிருக்க வேண்டும், அவ்வாறு அனுமதி பெறாமல் வெளியில் செல்பவர்கள் மீது, விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் மற்றும் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது.

வெளியில் செல்ல அரசால் அனுமதிக்கப்பட்ட துறையை சார்ந்தவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக செல்ல கூடியவர்கள் https://dxbpermit.gov.ae/permits எனும் இந்த லிங்கில் பதிவு செய்து அனுமதி பெற்று கொள்ள வேண்டும் என்றும் துபாய் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துபாயில் நடைபெறும் இந்த சுத்திகரிப்பு திட்டம், மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எந்நேரமும் 800 737648 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சந்தேங்களை நிவர்த்தி செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!