ஏப்ரல் 6 முதல் எமிரேட்ஸ் விமான சேவை தொடக்கம்…!!! விசிட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை..!!!
துபாயை மையமாக கொண்டு விமான போக்குவரத்துக்கு சேவை வழங்கி வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் (Emirates Airlines) நிறுவனம் வரும் ஏப்ரல் மதம் 6 ஆம் தேதி முதல் பயணிகள் போக்குவரத்து சேவையை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தொடங்க போவதாகவும் இதற்கு உண்டான அனுமதியும் அமீரக சிவில் போக்குவரத்து உயரதிகாரிகளிடம் இருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
Emirates has received approval from UAE authorities to start flying a limited number of passenger flights. From 06 April, these flights will initially carry travellers outbound from the UAE. Details will be announced soon. 1/2 pic.twitter.com/fnhLxQanIM
— HH Sheikh Ahmed bin Saeed Al Maktoum (@HHAhmedBinSaeed) April 2, 2020
இது பற்றி துபாய் சிவில் ஏவியேஷன் தலைவரும் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் அண்ட் CEO வும் ஆன மாண்புமிகு ஷேக் அஹமத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில், இந்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்படும் பயணிகள் விமான போக்குவரத்தானது முதற்கட்டமாக தன் சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட் விசாவில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “காலப்போக்கில், பயணிகள் மற்றும் விமான நிலைய செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஏற்ப பயணிகள் விமான போக்குவரத்துக்கு சேவைகளை படிப்படியாக மீண்டும் தொடங்குவதை எதிர்பார்க்கிறோம். இதில் எங்கள் மக்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகளுக்கும் எமிரேட்ஸ் உத்தரவாதம் அளிக்கும். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கும் ”என்றும் ஷேக் சயீத் அவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
எனினும், எந்தெந்த நாடுகளுக்கு முதலில் சேவைகள் தொடங்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி ஷேக் சயீத் அவர்கள் கூடிய விரைவில் இதனை பற்றிய கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.