Etisalat அசத்தல் அறிவிப்பு..!!! இரு மாதங்களுக்கு இலவச ஆடியோ மற்றும் வீடியோ கால்..!!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான எடிசலாட் (Etisalat) இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமீரகத்தில் வசிக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் அனைவரும் வரக்கூடிய அடுத்த இரு மாதங்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை இலவசமாக பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த இலவச திட்டமானது இம்மாதம் ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வருவதாகவும் எடிசலாட் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் “இந்த சவாலான காலங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இலவசமாக வழங்கப்படும் மாதாந்திர இணைய அழைப்பு திட்ட சேவையில் இனைந்து கொள்ளவும். எடிசலாட் இன்டர்நெட்டுடன் சப்போர்ட் செய்யக்கூடிய மொபைல் ஆப் பயன்படுத்தி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை இலவசமாக அனுபவிக்கவும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ‘IPC என்று டைப் செய்து 1012 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்” என்று கூறியுள்ளது.
இந்த திட்டத்தில் ஏற்கனவே இணைந்து மாத சந்தா செலுத்தி வருபவர்கள், அந்த திட்டத்திலிருந்து விலகி பின்னர் இந்த இலவச திட்டத்திற்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகள் படி இணைவதன் மூலம் அவர்களும் இரண்டு மாதங்கள் இலவச இணைப்பை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசால் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றான #Stayhome என்பதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வீட்டிலேயே இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக எடிசலாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைந்து கொள்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட VOIP ஆப்ஸ் மூலமாக அதாவது, BOTIM, HiU, Voico UAE மற்றும் C’Me போன்ற செயலிகள் மூலம் இலவச ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.