வளைகுடா செய்திகள்

தொழிலாளர்களுக்கு ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் உணவு..!! குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி தகவல்..!!

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டை சேர்ந்த “குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS)” அமைப்பானது புனிதமான இந்த ரமலான் மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு 7,000 இப்தார் உணவை குவைத் நாட்டின் பல பகுதிகளில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கவுள்ளதாக குவைத் நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் (KUNA) இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) செய்தி வெளியிட்டுள்ளது.

இது பற்றி KRCS-ன் பொதுச்செயலாளர் மகா அல்-பர்ஜாஸ் (Maha Al-Barjas) அவர்கள் செய்தியாளர்களுக்கு கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில், அல்-மஹ்பூலா, கைத்தான், மகப்பேறு, அல்-அமிரி மற்றும் அல்-சபா மருத்துவமனைகள், மருத்துவ கிடங்குகள், குவைத் பல்கலைக்கழகம், முபாரக் அல்-கபீர் ஆளுநர் பகுதி, துறைமுகங்கள், மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம், பயன்பாட்டு கல்வி மற்றும் பயிற்சிக்கான பொது அதிகாரசபை (PAAET) உள்ளிட்டவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அல்-பர்ஜாஸ் அவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிறருக்கு உதவ முன்வரும் நபர்களை ரமலான் மாதம் முழுவதும் தேவையுள்ளோருக்கு உதவி செய்ய அழைப்பு விடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் வெப்பமான இந்த காலகட்டத்தில் பிறருக்கு உதவ முன்வந்துள்ள தன்னார்வலர்களையும் அவர் பாராட்டியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!