அமீரக செய்திகள்

துபாயில் குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் 12 மணி நேரம் இயங்க அனுமதி..!! துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை சுற்றறிக்கை..!!

கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக துபாயில் கடந்த சில வாரங்களாக அமலில் இருக்கும் லாக்டவுன் காரணத்தினால் வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், தற்பொழுது தளர்த்தப்பட்டு துபாயில் மட்டும் சில வணிக நடவடிக்கைகளுக்கான வேலை நேரத்தை நீட்டிப்பதாக துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை இன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, பண பரிமாற்றம் (Money exchanges), கட்டிட பராமரிப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய சப்ளையர்கள் (building maintenance and related suppliers), ஏர் கண்டிஷனிங் (air conditioning) மற்றும் குளிரூட்டும் உபகரணங்கள் பழுது (cooling equipment repair) மற்றும் பராமரிப்பு நிறுவனங்கள் (maintenance firms) ஆகியவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர காலங்களில், கட்டிட பராமரிப்பு மற்றும் ஏர் கண்டிஷனர் பழுதுபார்ப்பு சேவைகள் போன்றவை இரவு 8 மணிக்குப் பிறகும் செயல்படலாம் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட துபாய் பொருளாதார மேம்பாட்டு துறை அறிவிப்பின்படி, “சில வணிக நடவடிக்கைகளுக்கான வேலை நேரங்களை நீட்டிப்பது குறித்து துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழுவின் (Supreme Committee for Crisis and Disaster Management) முடிவின்படி, பணப் பரிமாற்றம், கட்டிட பராமரிப்பு மற்றும் தொடர்புடைய சப்ளையர்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிரூட்டும் உபகரணங்கள் பழுது மற்றும் பராமரிப்பு போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!