கொரோனா தாக்கத்தையொட்டி வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மறு அறிவிப்பு வரும் வரையிலும் இலவசம்..!!! அபுதாபி அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் கடந்த மார்ச் மாதம் 30 ம் தேதி முதல் மூன்று வார காலத்திற்கு மவாகிஃப் பார்க்கிங் கட்டணத்தை (Mawaqif parking fees) நிறுத்தி வைப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது இந்த இலவச பார்க்கிங் சேவையானது அடுத்த அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி, புதன்கிழமை (இன்று) அபுதாபியின் நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (Department of Municipalities and Transport) வெளியிட்ட அறிக்கையில், அபுதாபியில் வாகனங்களுக்கான மவாகிஃப் பார்க்கிங் கட்டணத்தை அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக துபாயில் கொரோனாவிற்கான சுத்திகரிப்பு பணிகளையொட்டி, இதே போல் இலவச பார்க்கிங் மேலும் நீட்டிக்கப்பட்டு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
.@AbuDhabiDMT announces the continuation of suspension of Mwaqif parking fees in #AbuDhabi until further notice.
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) April 15, 2020