துபாயில் இருந்து அபுதாபி, ஷார்ஜா போன்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் சேவை நிறுத்தம்..!! RTA அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மைய பகுதியான துபாயில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்ல கூடிய அனைத்து இன்டெர்சிட்டி (Inter-city) பேருந்து சேவைகளையும் தர்காலிகமாக நிறுத்திவைப்பதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை (RTA) தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
துபாய் பேரிடர் மேலாண்மை குழு அறிவித்த 24 மணி நேர சுத்திகரிப்பு திட்டத்தை தொடர்ந்தும், கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஏதுவாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து துபாயில் இருந்து அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், அல் அய்ன், ஹத்தா மற்றும் ஃபுஜைரா போன்ற நகரங்களுக்கு செல்ல கூடிய பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக RTA அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஏப்ரல் 5 முதல் தொடங்கி மறு அறிவிப்பு வரை தொடரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Following the National Sterilisation Programme, the Intercity Bus service from Dubai to all areas (Ajman, Sharjah, Abu Dhabi, Al Ain, Hatta, and Fujairah) will be suspended starting April 5th, 2020, until further notice. #YouSafetyOurPriority #StayHome #WeAreCommitted
— RTA (@rta_dubai) April 5, 2020