ரமலானை முன்னிட்டு 1,511 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய அமீரக ஜனாதிபதி உத்தரவு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக சிறைகளில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் 1,511 கைதிகளை விடுதலை செய்ய ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (His Highness Sheikh Khalifa bin Zayed Al Nahyan) அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என அமீரகத்தின் செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவிருக்கும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு சேரவேண்டிய நிதிக் கடமைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
#President pardons 1,511 prisoners ahead of #Ramadan#WamNews https://t.co/gaCQD8Wgmt pic.twitter.com/wFtQSsGgkI
— WAM English (@WAMNEWS_ENG) April 21, 2020
இந்த செய்கையானது மாண்புமிகு ஷேக் கலீஃபாவின் மனிதாபிமான முயற்சி மற்றும் மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் மதிப்புகளை பிரதிபலிப்பது மற்றும் கைதிகள் தங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பை வழங்குவது மற்றும் அவர்களின் குடும்பங்கள், சமூகங்களுக்கு சேவையாற்ற மற்றும் நேர்மறையாக பங்களிக்க சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது போன்றவற்றின் ஒரு பகுதியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுவரும் மாண்புமிகு ஷேக் கலீஃபாவின் இந்த வருடாந்திர மன்னிப்பு, கைதிகள் தங்களின் குடும்பதோடு ஒன்றிணைவது மற்றும் குடும்ப பிணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அவர்களின் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்துடன் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி மீண்டும் சிந்திக்கவும், அவர்களை வெற்றிகரமான சமூக வாழ்விற்கு வழிநடத்த அனுமதிக்கும் நீதியான பாதையில் திரும்பவும் வாய்ப்பளிக்கிறது.