அமீரக செய்திகள்

விமான தடை காலத்திலும் 22,900 வெளிநாட்டவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்த அமீரகம்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் அமீரகத்தில் சிக்கி தவித்த 22,900 வெளிநாட்டவர்களை, அமீரக அரசால் மேற்கொள்ளப்பட்ட 127 தரை வழி மற்றும் வான் வழியாக திருப்பி அனுப்பும் பயண நடவடிக்கைகள் மூலம் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (Ministry of Foreign Affairs and International Cooperation-MoFAIC) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கூடுதலாக 27 திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் கூறியுள்ளது.

இதில், 5,185 வெளிநாட்டு குடிமக்கள் அவர்களின் நாடுகளுக்கு அமீரகத்திற்கு சொந்தமான விமான நிறுவனங்களின் மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு 14 நாடுகள் அதாவது கனடா, அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து, பிரான்ஸ்,ஜெர்மனி, அல்ஜீரியா, போஸ்னியா, உக்ரைன், சூடான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

அமீரகத்தில் இருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், விமானத்தடையின் காரணமாக 43 நாடுகளில் சிக்கிக்கொண்ட 2,286 அமீரக குடிமக்களையும் வான்வழி மற்றும் தரை வழி போக்குவரத்தின் மூலமாக அமீரகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation), அமீரகத்தில் குறிப்பாக தனியார் துறையில் பணிபுரிந்து வேலையை இழந்த ஊழியர்கள், விசிட்டில் வந்தவர்கள் மற்றும் சொந்த நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த குடியிருப்பாளர்களை திருப்பி அனுப்பும் அமீரகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுக்கும் நாடுகளுடனான “ஒத்துழைப்பு மற்றும் தொழிலாளர் நல உறவுகளை” மறுசீரமைப்பதற்கான பல்வேறு வழிகளையும் பரிசீலித்து வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!