அமீரக செய்திகள்

மார்ச் 1 முதல் காலாவதியான விசிட், டூரிஸ்ட், ரெசிடென்ஸ் என அனைத்து விசாக்களும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் செல்லுபடியாகும்..!!! அமீரக அரசு அறிவிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அமீரக அரசால் வழங்கப்பட்டு காலாவதியான அனைத்து விசாக்கள், நுழைவு அனுமதி (entry permit) மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டை (Emirates ID) ஆகியவை இந்த ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அமீரகத்தின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையம் (Federal Authority for Identity and Citizenship) செய்தித் தொடர்பாளர் கர்னல் காமிஸ் அல் காபி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களின், மார்ச் 1, 2020 க்குப் பிறகு காலாவதியாகும் அனைத்து வகையான அமீரக விசாக்கள், நுழைவு அனுமதி (entry permit) மற்றும் எமிரேட்ஸ் அடையாள அட்டைகள் (Emirates ID) ஆகியவை இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரையிலும் செல்லுபடியாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும், அமீரக ரெசிடென்ஸ் விசாவை வைத்திருப்பவர்கள் தற்போது அமீரகத்தில் இருந்தாலும் அல்லது தங்கள் சொந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கும் விசாவானது இந்த ஆண்டு இறுதி வரையிலும் செல்லுபடியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி, அமீரகத்திற்குள் நுழைய நான்கு வகையான விசாக்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த விசாக்கள் அமீரகத்திற்கு வருபவர்களின் நோக்கத்தை பொறுத்து சுற்றுலா விசா (tourist visa), விசிட் விசா (visit visa), ட்ரான்சிட் விசா (Transit visa) மற்றும் வேலைக்கான விசா (employment visa) என வகுக்கப்படுகிறது.

இது பற்றி அமீரக அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையத்தின் (Federal Authority for Identity and Citizenship) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவை சார்ந்தவர்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் இது தொடர்பான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்” என்று செய்தித்தொடர்பாளர் அல் காபி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!