அமீரகத்தில் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு எழும் சந்தேகங்களும் அதற்குண்டான விளக்கங்களும்…!!! சிறு தொகுப்பு..!!!
அமீரகத்தில் விசிட் விசாவில் வந்து தற்போதைய சூழ்நிலையின் காரணமாக தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாதவர்கள், விசிட் விசா காலாவதியானவர்கள் போன்றோரின் சந்தேகங்களுக்கும் மற்றும் பல்வேறு கேள்விகளுக்கும் அமீரகத்தின் ஆங்கில நாளிதழான கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) மூலமாக குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (General Directorate of Residency and Foreigners Affairs-GDRFA) Amer கால் சென்டரை தொடர்பு கொண்டு பெறப்பட்ட தகவல்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவான கேள்விகளும் அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்களும்
கேள்வி 1 : அமீரக அரசால் அளிக்கப்பட்டுள்ள மூன்று மாத கால விலக்கானது விசிட் விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்துமா…? விசிட் விசா காலாவதியானவர்களுக்கு அபராதத்தில் இருந்து விலக்கு உண்டா…? மேலும், அரசால் அளிக்கப்பட்டுள்ள மூன்று மாத கால விலக்கு எந்த நாளில் தொடங்கி எந்த நாளில் முடியும்?
அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று மாத விலக்கின்படி, விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் காலாவதியாகக் கூடிய அனைத்து வகையான அமீரக நுழைவு விசாக்களுக்கும் பொருந்தும். எனினும், இந்த விலக்கு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் பட்சத்திலோ அல்லது மே மாதம் இறுதி வரையிலோ மட்டுமே செல்லுபடியாகும். விமானப் போக்குவரத்து மே மதத்திற்கு முன்பாகவே துவங்கி விட்டால் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு மே மாதம் இறுதி வரையில் என்ற கணக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி 2 : எனது சகோதரர் அமீரகத்தில் விசிட் விசாவில் இருக்கிறார். இப்போது அவர் விசா காலம் முடிந்து தனது சலுகை காலத்தில் இருக்கிறார். சலுகைக் காலம் முடிந்த பின்பும், அவர் இங்கேயே இருக்கும் நிலை வந்தால், அவர் ஓவர்ஸ்டேயில் (overstay) இருப்பவர் என்று கருத்தப்படுவாரா..? மேலும் அவருக்கு அபராதம் விதிக்கப்படுமா?
விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கக் கூடிய இக்காலத்தில் அவரது விசாவின் சலுகை காலம் (grace period) முடிவடைந்திருந்தால், அவருக்கும் அபராதம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
கேள்வி 3 : என் மனைவி ஜனவரி 5, 2020 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தார். அவரது விசா காலம் முடியும் தேதி 02/03/2020. அவர் இங்கு விசிட் விசாவில் இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில், என் மனைவிக்கு விசா காலத்தை நீட்டிக்க வேண்டி விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது அரசின் அறிவிப்புப்படி மேற்கொண்டு தங்கலாமா?
கடைசியாக வந்த அறிவிப்பின் படி, உங்கள் மனைவிக்கும் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
கேள்வி 4: எனது விசிட் விசா இந்த மாத இறுதியில் காலாவதியாகிறது. நான் எனது விசாவினை நீட்டிக்க விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்..? மேலும், அபராதம் செலுத்தாமல் நீட்டிக்க வாய்ப்புண்டா?
நிச்சயம் உங்களின் விசாவினை நீட்டிக்க முடியும். உங்களின் விசிட் விசா தனி நபரின் ஸ்பான்சர்ஷிப் கீழ் இருந்தால் மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவே நீட்டித்துக் கொள்ள முடியும்.
உங்களின் விசிட் விசா டிராவல் ஏஜென்சி மற்றும் ஏர்லைன் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு உங்களின் விசாவினை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
கேள்வி 5 : எனது சகோதரரின் விசிட் விசா இன்னும் சில நாட்களில் காலாவதியாகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எனது சகோதரரின் விசிட் விசாவினை இங்கேயே நீட்டித்துக் கொள்ள விரும்புகிறேன். தற்போதைய சூழ்நிலைகள் மாறி விசிட் விசாவினை நீட்டித்துக் கொள்ள அமீரக அரசு அனுமதி அளித்தால் விசிட் விசாவினை நீட்டிப்பதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
விசிட் மற்றும் டூரிஸ்ட் விசா இரண்டிற்கும் நீட்டித்துக் கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம் 815 திர்ஹம்ஸ்.
கேள்வி 6 : எனது மனைவியின் விசா மே 6 ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. விசிட் விசாவை அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் புதுப்பிக்க முடியும் என்று கேள்விப்பட்டேன். அவ்வாறாயின் எனது மனைவி இங்கே தொடர்ந்து தங்க முடியுமா?
அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று மாத விலக்கானது, விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் காலாவதியாகக் கூடிய அனைத்து வகையான அமீரக நுழைவு விசாக்களுக்கும் பொருந்தும். எனினும், இந்த விலக்கு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் பட்சத்திலோ அல்லது மே மாதம் இறுதி வரையிலோ மட்டுமே செல்லுபடியாகும். விமானப் போக்குவரத்து மே மதத்திற்கு முன்பாகவே துவங்கி விட்டால் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு மே மாதம் இறுதி வரையில் என்ற கணக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி 7 : என்னிடம் மூன்று மாதத்திற்கான UAE விசா உள்ளது. தற்போது அமலில் இருக்கக்கூடிய விமான போக்குவரத்துத் தடை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக, என்னால் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் வர இயலவில்லை. என்னுடைய விசாக்காலத்தை தானாகவே நீட்டித்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏதேனும் உண்டா?
நீங்கள் ஐக்கிய அரபு அமீரக நாட்டை விட்டு வெளியே இருக்கும் பட்சத்தில், உங்கள் விசா இனிமேல் செல்லுபடியாகாது.
கேள்வி 8 : ஏப்ரல் 7 ஆம் தேதியுடன் காலாவதியாகும் டூரிஸ்ட் விசாவை நான் வைத்திருக்கிறேன். மூன்று மாத அபராத விலக்கு என்றிலிருந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படும்..? மேலும், அபராதத்தை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று மாத விலக்கானது, விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் காலாவதியாகக் கூடிய அனைத்து வகையான அமீரக நுழைவு விசாக்களுக்கும் பொருந்தும். எனினும், இந்த விலக்கு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் பட்சத்திலோ அல்லது மே மாதம் இறுதி வரையிலோ மட்டுமே செல்லுபடியாகும். விமானப் போக்குவரத்து மே மதத்திற்கு முன்பாகவே துவங்கி விட்டால் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு மே மாதம் இறுதி வரையில் என்ற கணக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி 9 : கேன்சல் செய்யப்பட்ட ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களின் நிலை என்ன..? விசா ரத்து செய்யப்பட்ட பின்னர் நாட்டை விட்டு வெளியேற எனக்கு 12 நாட்கள் சலுகைக் காலம் (grace period) உள்ளன என்று நான் நினைக்கிறேன். தற்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களின் ரெசிடென்ஸ் விசா கேன்சலானது, விமானப் போக்குவரத்து தடை அமலில் இருந்த காலத்தில் செய்யப்பட்டிருந்தால், விமானப் போக்குவரத்துக்கான தடை நீங்கி விமான சேவை மீண்டும் தொடங்கிய தேதியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு உங்களுக்கு சலுகை காலம் (grace period) அளிக்கப்படும்.
கேள்வி 10 : எனது மாமியாரின் விசாவை நீட்டிக்க வேண்டி நாங்கள் ஏஜென்ட்டிடம் பணம் செலுத்தினோம். தற்போது அந்த நடைமுறைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுள்ளோம். எனினும் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு ஏஜென்ட்டிடம் நாங்கள் சட்டப்பூர்வமாகக் கோர ஏதாவது வழி இருக்கிறதா?
தொகை செலுத்தப்பட்டால், பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
கேள்வி 11 : எனது விசிட் விசா இந்த வாரத்துடன் காலாவதியாகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? எனது விசிட் விசாவை புதுப்பிக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. ஏனென்றால் எல்லா ஏஜென்சிகளும் விசா கட்டணத்திற்கு அதிக விலை நிர்ணயம் செய்கிறார்கள். மேற்கொண்டு தங்க நான் என்ன செய்ய வேண்டும்?
அமீரக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்று மாத விலக்கானது, விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் காலாவதியாகக் கூடிய அனைத்து வகையான அமீரக நுழைவு விசாக்களுக்கும் பொருந்தும். எனினும், இந்த விலக்கு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் பட்சத்திலோ அல்லது மே மாதம் இறுதி வரையிலோ மட்டுமே செல்லுபடியாகும். விமானப் போக்குவரத்து மே மதத்திற்கு முன்பாகவே துவங்கி விட்டால் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு மே மாதம் இறுதி வரையில் என்ற கணக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
கேள்வி 12 : நான் ஒரு டிராவல் ஏஜென்ட் மூலம் எனது தாயின் விசிட் விசாவை தற்பொழுதுதான் புதுப்பித்தேன். அதற்காக 2,300 திர்ஹம் நான் கட்டணமாக செலுத்தினேன். இப்போது வந்த செய்தியின் படி, அவர் மேற்கொண்டு தங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, நான் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?
கட்டணத்தி தொகை செலுத்தப்பட்டு விட்டால், பணத்தைத் திரும்பப் பெற முடியாது.
கேள்வி 13 : நான் UAE ரெசிடென்ஸ் விசாவை வைத்திருக்கிறேன். எனது விசா ஏப்ரல் 2, 2020 அன்று காலாவதியாகிவிட்டது. நான் தற்போது மும்பையில் சிக்கியுள்ளேன். எனது ரெசிடென்ஸ் விசா காலாவதியாகி விட்ட இந்த நேரத்தில் அமீரகத்திற்கு வருவதற்கு ஏதேனும் நடைமுறைகள் உண்டா..? மேலும், விசா இல்லாமல் அமீரகத்திற்கு வர இந்திய அரசாங்கம் என்னை அனுமதிக்காது. நான் என்ன செய்ய வேண்டும்?
இறுதியாக வந்த அறிவிப்பின்படி, தற்போதைய சூழ்நிலையில் அமீரகத்திற்கு வரமுடியாமல் வெளிநாட்டில் இருக்கக்கூடிய அமீரக குடியிருப்பாளர்கள், தாங்கள் வைத்திருக்கும் ரெசிடென்ஸ் விசாவானது விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட காலத்தில் காலாவதியாகி இருந்தால், அவர்களுக்கு விமானப் போக்குவரத்துக்கான தடை நீங்கி விமான சேவை மீண்டும் தொடங்கிய தேதியில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் அமீரகத்திற்கு திரும்பி வர அனுமதிக்கப்படுவர்.
இதில் கூறப்பட்ட அனைத்து விளக்கங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்றும் Amer கால் சென்டரின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறிய Amer கால் சென்டரை 8005111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.