இந்தியர்களை அழைத்து வர அமீரகம், மாலத்தீவிற்கு புறப்பட்ட இந்திய போர்க்கப்பல்கள்..!!!
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டிற்கு மீட்டு வருவதற்காக இந்திய அரசாங்கம் இந்தியாவிற்கு சொந்தமான விமானங்களையும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்களையும் அனுப்பி வைக்கும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் மூலம் மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து INS ஜலஷ்வா (INS Jalashwa) மற்றும் INS மாகர் (INS Magar) ஆகிய இரு கப்பல்கள் மாலத்தீவிற்கும் INS ஷார்தூல் (INS Shardul) கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் அங்குள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று கப்பல்களும் மாலத்தீவு மற்றும் அமீரகத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு கேரளாவில் உள்ள கொச்சினை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. INS மாகர், INS ஷர்தூல் ஆகியவை கடற்படையின் தென் பிரிவை சேர்ந்த போர் கப்பல்கள் மற்றும்। INS ஐலஷ்வா கிழக்கு பிரிவை சேர்ந்த போர்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
INS Jalashwa sailed from Visakhapatnam a few days ago from the east coast to the west coast. Total 14 warships have been readied for evacuating Indian citizens from Gulf and other countries: Indian Navy officials (2/2) https://t.co/xsArtKWOwm
— ANI (@ANI) May 5, 2020