அமீரக செய்திகள்

துபாயில் விசா தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற புதிய Mobile App அறிமுகம்…!!

துபாயில் ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான பொது இயக்குநரகத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளையும் சேவைகளையும் தற்பொழுது ஸ்மார்ட் சேனல்கள் மூலம் ஆன்லைனில் பெற முடியும் என்று GDRFA வின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

GDRFA துபாயின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி கூறுகையில், 2021 க்குள் அரசு சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் மாற்றப்பட வேண்டும் என்ற தலைமை உத்தரவின் ஒரு பகுதியாக GDRFA வின் சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நுழைவு அனுமதி, ரெசிடென்ஸ் அனுமதி, ஸ்தாபன சேவைகள், துறைமுக சேவைகள் மற்றும் தனிப்பட்ட நிலை சேவைகள் போன்ற முக்கிய சேவைகள் அனைத்தும் ஸ்மார்ட்போனின் வசதியின் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த இடத்திலிருந்தும் சேவைகளை வழங்குவதற்கும் ஏதுவாக GDRFA துபாய் அதன் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளுக்கும் சிறந்த தீர்வாக டிஜிட்டல் தளங்களை ஏற்றுக்கொண்டு ஆன்லைனில் சேவைகளை வழங்குகிறது” என்று அல் மர்ரி கூறினார்.

“இந்த டிஜிட்டல் மாற்றம் அனைத்து சூழ்நிலைகளிலும் எளிதாக சேவைகளை அணுகும் வகையில் குறிப்பாக COVID-19 பரவலுடன் ஏற்றுக்கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து ஆன்லைன் சேவைகளை வழங்குவோம்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், GDRFA-துபாயின் நிர்வாக நடவடிக்கைகளின் இயக்குனர் கேப்டன் மரியம் தைப் கூறுகையில், ஸ்மார்ட் சேனல்கள் மூலம் சேவைகளை வழங்குவதற்கான மாற்றம், GDRFA வின் தலைமையகத்திற்கு நேரடியாக சென்று சேவைகள் அணுகுவதை 99 சதவீதம் குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

IOS மற்றும் Android இல் GDRFA துபாய் பயன்பாட்டைப் (GDRFA Dubai app) பதிவிறக்குவதன் மூலம் மக்கள் சேவைகளைப் பெறலாம்.

GDRFA சேவைகளை அணுகும் முறை

அமீரகத்திற்கு உள்ளே தொலைபேசி எண் 8005111
அமீரகத்திற்கு வெளியே தொலைபேசி எண் 0097143139999
ஈமெயில் முகவரி [email protected] , [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!