அமீரகத்திலிருந்து இந்தியா செல்பவர்களுக்கான விமான பயண டிக்கெட் விலை வெளியீடு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக மே 7ஆம் தேதி (நாளை) முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இதன்படி முதல் வாரத்தில் இந்திய விமானங்கள் செல்லும் நாடுகளின் விபரங்களும் இந்தியர்களை அழைத்து கொண்டு வந்தடையும் இந்திய நகரங்களின் விபரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் இந்த சிறப்பு விமானங்களில் பயணம் செய்து சொந்த நாடுகளுக்கு செல்வதற்கான பயணச்செலவு பயணிகளாலேயே ஏற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு செல்வதற்கு ஆகும் பயண டிக்கெட்டின் விலையானது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செல்ல ஆகும் செலவு 700 திர்ஹம் (14,000 ரூபாய்) முதல் 750 திர்ஹம் (15,000 ரூபாய்) வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, இந்த சிறப்பு விமானங்களில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதாக பயணிகளுக்கிடையே வெற்று இருக்கைகள் போடப்படும் என்றில்லாமல் அனைத்து இருக்கைகளிலுமே பயணிகள் அமர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எப்பொழுதும் போலவே ஒரு விமானத்திற்கு 200 பயணிகள் என பயணம் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, திருப்பி அனுப்பும் விமானத்திற்கு விமான நிறுவனங்கள் பயணச்செலவாக ஏறக்குறைய 1,900 திர்ஹம் வசூலிக்கக்கூடும் என்று செய்திகள் வந்தன. இது சமூக இடைவெளிகள் பின்பற்றப்படும் என்ற கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்தது. ஆனால் தற்பொழுது சமூக இடைவெளிகள் விமானங்களில் கடைபிடிக்காத காரணத்தினால் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
source : Gulf News