அமீரகத்தின் தொழில்துறை மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களில் சுத்திகரிப்பு நேரம் மாற்றியமைப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டமானது இன்று (மே 20, புதன்கிழமை) முதல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் என ஐக்கிய அரபு அமீரக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் அமீரகத்தில் இருக்கும் தொழில்துறை பகுதிகள் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களில் தேசிய சுத்திகரிப்பு திட்டமானது இன்று முதல் மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் என உள்துறை அமைச்சகம் தற்பொழுது அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிவிப்பில் இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் சுத்திகரிப்பு நடைபெறும் நேரங்களில் அவசரகால நிலைகளைத் தவிர்த்து தங்குமிடங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.
மேலும், அமீரகத்தின் தொழில்துறை பகுதிகள் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களை தவிர மற்ற மற்ற அனைத்து பகுதிகளிலும் சுத்திகரிப்பு திட்டமானது ஏற்கெனவே அறிவித்திருந்ததை போல, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.