வளைகுடா செய்திகள்

கத்தார் : கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நான்கு கட்டங்களாக தளர்த்தப்படுவதாக அறிவிப்பு..!!

வளைகுடா நாடுகளில் சமீப காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நான்கு கட்டங்களாக தளர்த்தப்படுவதாக கத்தார் நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் லால்வா ராஷித் அல் காதர் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நான்கு கட்ட திட்டமானது வரும் ஜூன் மாதம் 15 ம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டம் ஜூன் 15 ம் தேதி முதல் ஆரம்பமாகும்.

இரண்டாம் கட்டம் ஜூலை 1 ம் தேதி முதல் ஆரம்பமாகும்.

மூன்றாம் கட்டம் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆரம்பமாகும்.

நான்காம் கட்டம் செப்டெம்பர் 1 ம் தேதி முதல் ஆரம்பமாகும்.

முதல் கட்டம்
  • நாட்டிலுள்ள குறிப்பிட்ட சில மசூதிகள் மீண்டும் திறக்கப்படும்
  • சில நிபந்தனைகளின் கீழ் ஷாப்பிங் மால்களில் இருக்கக்கூடிய சில கடைகள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும்
  • குறிப்பிட்ட சில பூங்காக்கள் பொதுமக்களுக்காக திறக்கப்படும், இருப்பினும் 12 வயதிற்கு கீழுள்ள சிறுவர்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்படும்
  • தனியார் க்ளினிக்குகள் 40 சதவீத அளவிலான எண்ணிக்கையின் அடிப்படையில் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும், ஒவ்வொரு கட்டத்திலும் 20 சதவீத எண்ணிக்கை அதிகரித்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இரண்டாம் கட்டம்
  • இரண்டாவது கட்டத்தில் நாட்டில் இருக்கும் உணவகங்களை பகுதியளவு மட்டும் திறக்க அனுமதிக்கப்படும்
  • உணவகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படும்
  • மால்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படும் மற்றும் குறிப்பிட்ட அளவிலான மக்களே அனுமதிக்கப்படுவார்கள்
  • மார்க்கெட், மொத்த விற்பனை கடைகள் (wholesale markets), அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படும் மற்றும் குறிப்பிட்ட அளவிலான மக்களே அனுமதிக்கப்படுவார்கள்
மூன்றாம் கட்டம்
  • மூன்றாவது கட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்திருக்கும் நாடுகளில் இருந்து விமானங்களை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படும் மற்றும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்
  • கத்தாருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த செலவில் அந்நாட்டில் தனிமைப்படுத்தலுக்காகவே நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் இரண்டு வார தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
  • ஷாப்பிங் மால்கள், மார்க்கெட், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சலூன் கடைகள் போன்றவை முழுவதுமாக செயல்பட அனுமதி அளிக்கப்படும். இருப்பினும் அந்த இடங்களில் குறிப்பிட்ட அளவிலான மக்களே அனுமதிக்கப்படுவார்கள்
நான்காம் கட்டம்
  • அனைத்து மசூதிகளும் இயல்பான செயல்பாட்டை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படும்
  • விமான பயண திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்
  • திருமண விருந்துகள், வணிகக் கூட்டங்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை நடைபெற அனுமதிக்கப்படும்.
  • புதிய கல்வியாண்டு ஆரம்பமாவதையொட்டி, கல்வி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதும் அடங்கும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!