வளைகுடா செய்திகள்

KSA : கொரோனா தாக்கம் முடிந்த பின்னரே குடியிருப்பாளர்கள் சவூதிக்கு திரும்ப அனுமதி..!! AlJawazat தகவல்..!!

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அந்நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்பொழுது தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும், மற்ற வளைகுடா நாடுகளை ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவிலேயே அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. அதிகபட்சமாக, கடந்த வாரத்தில் ஒரு நாளில் மட்டுமே சுமார் 5000 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் பயணத்திற்கு, இந்த வருடம் வெளிநாட்டவர்கள் எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்நாட்டின் குடிமக்களுக்கும் தற்பொழுது சவூதி அரேபியாவில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளை சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கும் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் சமீபத்தில் சவுதி அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட்டிற்கான பொது இயக்குநரகம் (JAWAZAT) வெளிநாடுகளில் இருக்கும் சவூதி குடியிருப்பாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் இருக்கும் சவூதி அரேபியாவின் குடியிருப்பாளர்கள் கொரோனாவின் தாக்கம் முடியும் வரை சவூதிக்கு திரும்ப அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கக்கூடிய செல்லுபடியாகும் சவூதி அரேபியா exit and return  வைத்திருக்கும் குடிருப்பாளர்கள் தங்களின் விசா காலம் முடிவதற்குள் நாட்டிற்குள் மீண்டும் திரும்பி வருவது குறித்த குடியிருப்பாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கையில் இந்த அறிவிப்பை பாஸ்போர்ட் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட்டிற்கான பொது இயக்குநரகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், வெளிநாடுகளில் இருக்கும் சவூதி நாட்டின் குடியிருப்பாளர்கள் கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நாட்டிற்கு மீண்டும் திரும்ப வர முடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் கூறுகையில், குடியிருப்பாளர்கள் மீண்டும் நாட்டிற்குள் திரும்புவது குறித்த அறிவிப்பானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் விசாவினை வைத்திருப்பவர்களே நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்களின் விசா நீட்டிப்பது தொடர்பான வழிமுறைகள், கொரோனாவின் தாக்கம் முடிந்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!