குவைத் : அடுத்த கட்ட அறிவிப்பில் தமிழகத்திற்கு ஒரு விமானம் மட்டும் ஒதுக்கீடு..!!
வெளிநாடுகளில் வசிப்பவர்களின் இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிலிருந்து 12 சிறப்பு விமானங்கள் இந்தியாவிற்கு செல்ல இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த அடுத்த கட்ட அறிவிப்பில், குவைத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு விமானம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூன் 18 ஆம் தேதி புறப்படும் எனவும், தமிழகத்தின் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்க்கு இந்த சிறப்பு விமானம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
குவைத்திலிருந்து இயக்கப்படும் 12 சிறப்பு விமானங்கள், சென்னை தவிர இந்தியாவின் பிற நகரங்களான அமிர்தசரஸ், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கோழிக்கோடு, மும்பை, டெல்லி, லக்னோ, கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.