VBM 5: ஓமானில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் அட்டவணையை வெளியிட்ட இந்திய தூதரகம்..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையான வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் ஓமானில் இருந்து இந்தியாவிற்கு செல்லவிருக்கும் விமானங்களின் விபரங்களை ஓமானில் இருக்கக்கூடிய இந்தியத்தூதரகம் அறிவித்துள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அட்டவணையில் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 15 ம் தேதி வரையிலான விமானங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் இருந்து இந்தியாவிற்கு ஆகஸ்ட் 15 ம் தேதி வரையிலும் மொத்தம் 19 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு இரு விமானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரு விமானங்களில் ஒன்று
ஆகஸ்ட் 10 ம் தேதி திருச்சிக்கும் மற்றொன்று ஆகஸ்ட் 11 ம் தேதி சென்னைக்கும் இயக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த விமானங்களின் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய தூதரகம் வெளியிடும் ஆன்லைன் படிவத்தில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் படிவத்தை சமர்ப்பித்தவர்கள் ஓமானில் உள்ள ரூவி (Ruwi) மற்றும் வட்டாயா (Wattaya) போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Release: Schedule of flights from Oman under #Phase5. pic.twitter.com/3t96TIeVEp
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) July 29, 2020