அமீரக செய்திகள்

UAE : தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் நபரைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் நெரிசலான இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் நபரைக் கண்டறிய புதிய பாடி ஸ்கேனர் (Body Scanner) பயன்படுத்தப்பட இருப்பதாக பாதுகாப்பு தொழில் ஒழுங்குமுறை நிறுவனம் (Security Industry Regulatory Agency, SIRA) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்நிறுவனமானது சீன தொழில்நுட்ப நிறுவனமான CEDC (China Electronics Technology Group) உடன் ஒன்றிணைந்து 2021 ம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய பாடி ஸ்கேனரை சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

இந்த ஸ்கேனர் மூலம், தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்களை எளிதில் கண்டறிய முடியும் எனக் கூறப்பட்டுள்ளது

இது குறித்து SIRA-வின் முதலீட்டு அலுவலக மேலாளர் அப்துல்லா அல் சுவைதி அவர்கள் கூறுகையில், “இந்த சாதனம் உடலில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்படும் எந்தவொரு பொருளையும் இரண்டு வினாடிகளுக்குள் அடையாளம் காண முடியும். மேலும் இந்த சாதனமானது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் எந்த மனித உடற்கூறியல் விவரங்களையும் வெளிப்படுத்தாது. இதற்காக எந்தவொரு சிறப்பு விதிகள் அல்லது நடைமுறைகளுக்கு தனிநபர் இணங்க தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “இந்த அமைப்பு தற்போது சீன அரசாங்கத்தால் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சீன நிறுவனத்துடனான ஒரு கூட்டணியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த புதிய பாதுகாப்பு சாதனம், பாதுகாப்பு துறையில் ஒரு முக்கிய பங்காற்றும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!