அபுதாபி : அல் நஹ்யான் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அபுதாபி சிட்டியில் இருக்கும் அல் நஹ்யான் பகுதியில் இருக்கக்கூடிய மெடிகிளினிக் அல் மமோரா (Mediclinic Al Mamora) எனும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்த கட்டிடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் கூறும் போது வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் பெரியளவில் சத்தம் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram