அமீரக செய்திகள்
அஜ்மானின் காய்கறி சந்தையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அஜ்மானில் அமைந்துள்ள காய்கறி மற்றும் பழங்கள் சந்தையில் இன்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அஜ்மானில் உள்ள புதிய தொழில்துறை பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்க பல தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe