ஷார்ஜாவில் மூடப்பட்டிருந்த கடற்கரைகள் இன்று முதல் மீண்டும் திறப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த ஷார்ஜாவில் உள்ள அனைத்து பொது கடற்கரைகளும் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவில் இருக்கும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு இன்று (ஆகஸ்ட் 3) முதல் ஷார்ஜாவில் உள்ள அனைத்து கடற்கரைகளும் மீண்டும் திறக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், கடற்கரைகளுக்கு வரும் அனைத்து மக்களும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக ஷார்ஜாவில், கொரோனா பரவலையொட்டி மூடப்பட்டிருந்த சினிமாக்கள், ஹோட்டலில் இருக்கக்கூடிய தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள் ஆகியவை கடந்த ஜூன் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe