அமீரக செய்திகள்

துபாயில் புத்தாண்டு இரவு மட்டும் பொது போக்குவரத்தை பயன்படுத்தியோர் 16 லட்சம் பேர்..!! மாஸ் காட்டிய துபாய்..!!

புதிய ஆண்டான 2022 ம் வருடத்தை வரவேற்கும் விதமாக துபாயில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மட்டும் 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் துபாய் நகரம் முழுவதிலும் உள்ள பேருந்து, மெட்ரோ, டிராம் மற்றும் டாக்ஸி உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தியதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

RTA இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 31 ம் தேதி வெள்ளிக்கிழமை புத்தாண்டு இரவு அன்று மட்டும் 16,31,861 பயணிகள் RTA வின் பொது போக்குவரத்துமற்றும் டாக்சிகளைப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், புத்தாண்டு இரவில் 6,40,175 பேர் துபாய் மெட்ரோவையும், 34,672 பேர் துபாய் டிராமையும், 8,37,331 பேர் பொதுப் பேருந்துகளையும் பயன்படுத்தியதாக தரவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர 50,398 பயணிகள் பல்வேறு கடல் போக்குவரத்து வசதிகளையும், 96,937 ரைடர்கள் இ-ஹெய்ல் ரைடுகளையும் பயன்படுதியாகவும் RTA வின் தரவுகளில் கூறப்பட்டுளளது.

அதே போன்று டாக்சிகள் துபாய் நகரம் முழுவதும் 4,76,831 பயணிகளை ஏற்றி சென்றதாகவும் பகிரப்பட்ட இயக்கம் மூலம் 1,011 பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆண்டு முழுவதும், குறிப்பாக பொது நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளின் போது மில்லியன் கணக்கான பொது போக்குவரத்து பயணிகளுக்கு உயர்தர, பாதுகாப்பான மற்றும் மென்மையான போக்குவரத்து சேவைகளை துபாய் நகரம் முழுவதிலும் வழங்கி வருகிறது.

மேலும் தனது ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாக பயணிகள் தகுந்த போக்குவரத்து வழிகளை முன்பதிவு செய்வதற்கான மென்மையான அணுகலையும் RTA எளிதாக்கியுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!