அமீரக செய்திகள்

அமீரக தலைவர்களின் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்ட ‘சீட்ஸ் ஆஃப் தி யூனியன்’ ஷோவின் வீடியோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 49 வது தேசிய தினமானது நேற்று (புதன்கிழமை, டிசம்பர் 2,2020) அமீரகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அமீரகம் முழுவதுமான கொண்டாட்டங்கள் இந்த வருடம் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு கொரோனாவிற்கான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கொண்டாட அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்ததை தொடர்ந்து நேற்று அமீரகத்தின் துபாய், அபுதாபி, அல் அய்ன் போன்ற பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன.

அதில் இந்த வருடம் முதன் முறையாக ‘சீட்ஸ் ஆஃப் தி யூனியன் (Seeds of the Union)’ என்ற தலைப்பின் கீழ் அமீரகத்தின் வரலாறு மற்றும் அமீரகத்தின் மதிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக கடலுக்கு நடுவே நகரும் சிற்பத்தின் வடிவதை பிரதிபலிக்கும் விதமாகவும், அமீரகத்தின் வரலாற்றை சித்தரிக்கும் வண்ணம் ஒளிரும் காட்சிகளாலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும்,துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அபுதாபியின் மகுட இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அமீரகத்தின் உயர்நிலை உச்ச சபை உறுப்பினர்கள் மற்றும் பிற எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நேற்று மாலை அபுதாபியின் அல் ஜுபைல் மாங்க்ரோவ் பார்க்கில் (Al Jubail Mangrove Park) இந்நிகழ்ச்சி காட்சிப்படுத்தப்பட்டது.

பார்ப்போர் அனைவருக்கும் வியப்பை தரும் வண்ணம் சுமார் 40 நிமிடம் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ‘சீட்ஸ் ஆஃப் தி யூனியன்’ ஷோ நேற்று சரியாக மாலை 6:15 மணிக்கு அபுதாபியில் இருந்து அபுதாபி டிவி, துபாய் டிவி, துபாய் ஒன் (ஆங்கிலம்) மற்றும் மாத்ரூபூமி (மலையாளம்) உள்ளிட்ட தொலைக்காட்சிகள் வாயிலாவும், https://uaenationalday.ae/ என்ற இணையதளத்திலும் பொதுமக்களின் காட்சிக்காக நேரடியாக ஒளிபரப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/4vdgHenH0CM

15 மீட்டர் உயரமுள்ள சுழலும் க்யூப் சிற்பத்தை மையமாகக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியானது பார்ப்போருக்கு கதை சொல்லும் விதமாக டிஜிட்டல் விளக்குகளால் ஒளிரும், பைரோடெக்னிக் மற்றும் ட்ரோன்களால் சூழப்பட்டு கடலில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. அமீரகத்தின் தோற்றத்திற்கு அடித்தளம் வித்திட்ட அமீரக தந்தைகள் மற்றும் தொற்றுநோய்களின் போது தேசத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த முன்னணி சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவது உள்ளிட்டவையும் இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!