அமீரக செய்திகள்

துபாய்: டாக்ஸி ஓட்டுனர்களை கவுரவிக்கும் வகையில் ஓட்டுநர் பெயரை டாக்ஸி மேற்கூரையில் ஒளிர செய்த RTA..!!

துபாயில் உள்ள டாக்ஸிகளின் மேற்கூரையில் டாக்ஸி என்று எழுதப்பட்டிருக்கும் விளக்குகளில் இப்போது அந்த டாக்ஸியை ஓட்டும் ஓட்டுநர்களின் பெயர்களை காண்பிக்கும் ஒரு புதிய முயற்சயை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸின்போது அமலில் இருந்த ஊரடங்கு போன்ற கடினமான காலங்களில் துபாயை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவிய முன்னணி வீர்ர்களையும், மேலும் ஒவ்வொரு நாளும் வீதிகளில் தங்களின் வாழ்க்கையை கழிக்கும் டாக்ஸி ஓட்டுனர்களை ஆதரிக்கும் விதமாக இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

#WhosYourCabbie என்று RTA- வினால் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சியானது டாக்ஸி வாகனத்திற்குள் இருக்கும் நபரை அடையாளம் காண சில டாக்ஸிகளின் மேல் TAXI என்பதற்கு பதிலாக டாக்ஸி ஓட்டுநர்களின் பெயரை மாற்றியமைத்துள்ளது.

இத்திட்டம் குறித்து RTA டாக்ஸி ஓட்டுநர்களுக்கு, “நாங்கள் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம், நாங்கள் உங்களை அறிவோம், நீங்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்” என்று கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது பெரிதும் உருதுணையாக இருந்த ஹீரோக்களை ஆதரிப்பதே இந்த முயற்சி என்றும் RTA தெரிவித்துள்ளது.

இந்த பெயர் மாற்றம் குறித்து ஒரு டாக்ஸி ஓட்டுனர் கூறுகையில், “பல வாடிக்கையாளர்கள் என்னிடம் பல கேள்விகளைக் கேட்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒருபோதும் எனது பெயரைக் கேட்பதில்லை” என்று RTA பகிர்ந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும் டாக்ஸியில் பயணிக்கும் பயணிகள் ஓட்டுநர்களை அவர்களின் பெயர்களால் அழைக்கும்போது ஓட்டுநர்கள் மகிழ்ச்சியடையும் வீடியோவையும் RTA பகிர்ந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!