அமீரக செய்திகள்

துபாய், ஷார்ஜா இடையேயான பயண நேரம் இனி 9 நிமிடங்கள் மட்டுமே..!! புதிய போக்குவரத்து துவக்கம்..!!

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) சமீபத்திய புதுப்பிப்பின் படி, துபாய் மற்றும் ஷார்ஜாவை இணைக்கும் புதிய திட்டம் சனிக்கிழமை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை 25 நிமிடங்களிலிருந்து 9 நிமிடங்களாக குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் கவானீஜ் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் அல் கவானீஜ் மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலைகளின் சந்திப்பில் மூன்று பாதைகள் கொண்ட சுரங்கபாதையுடன் கூடிய சாலைகள் இரு திசைகளிலும் உள்ளன. அதேபோன்று அல் அவிரின் (Al Awir) திசையில் அல் அமர்தி (Al amardi) மற்றும் எமிரேட்ஸ் சாலைகள் (Emirates Road) இணையும் சந்திப்பில் இரண்டு பாதைகள் கொண்ட மேம்பாலமும் இந்த திட்டத்தில் அடங்கும் என RTA கூறியுள்ளது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மாத்தர் முகமது அல் டேயர் கூறுகையில், “அல் கவானீஜ் சாலைகள் திட்டத்தின் மேம்பாடு துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலையை ஏர்போர்ட் ஸ்ட்ரீட் வரை இணைக்கும் செங்குத்தான சாலைகளின் மேம்பாட்டின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.”

“எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலை இடையேயான பயண நேரத்தை 25 நிமிடங்களிலிருந்து 9 நிமிடங்களாக குறைக்க இந்த திட்டம் பங்களிக்கிறது. மேலும் அல் கவானீஜ்-ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலைகள் (அல் கவானீஜ் ரவுண்டானா) ஜங்ஷனில் காத்திருக்கும் நேரம் 330 வினாடிகள் முதல் 45 வினாடிகளாக குறைகிறது” என கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “இது ஒரு மணி நேரத்திற்கு 8,000 முதல் 16,000 வாகனங்கள் வரை சந்திப்பின் திறனை (capacity of the junction) இரட்டிப்பாக்குகிறது, மேலும் அல் கவானீஜ்-அல் அமர்தி சாலைகள் (Khawaneej-Al Amardi Roads) சந்திக்கும் இடத்தில் காத்திருக்கும் நேரத்தை பாதியாக குறைக்கிறது” என்று அல் டேயர் விளக்கினார்.

ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையுடன் அல் கவானீஜ் சாலையின் சந்திப்பில் 680 மீட்டர் நீளமுள்ள ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகள் கொண்ட ஒரு சுரங்கப்பாதை (tunnel) அமைப்பது இந்த திட்டத்தில் அடங்கும். அல் கவானீஜ் சாலையில் இலவச மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக மேற்பரப்பு சமிக்ஞை செய்யப்பட்ட சந்திப்பை (surface signalized junction) நிர்மாணிப்பதும், அல் கவானீஜ்-அல் அமர்தி சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ரவுண்டானாவை சமிக்ஞை செய்யப்பட்ட சந்திப்பாக (signalized junction) மேம்படுத்துவதும் படைப்புகளில் அடங்கும். அல் அமர்தி-எமிரேட்ஸ் சாலைகளின் சந்திப்பு ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள் கொண்ட மேம்பாலமாக மேம்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அல் கவானீஜ் சாலையில் அரேபிய மையத்திற்கு அருகே ஒரு நடைபாதைக்கான பாலம், அல் கவானீஜ் மற்றும் அல் அமர்தி சாலைகளில் 23 கி.மீ நீளமுள்ள சர்வீஸ் ரோட் மற்றும் அல்ஜியர்ஸ் தெருவில் உள்ள மூன்று சந்திப்புகளில் கூடுதல் மேம்பாடுகள் மற்றும் சிக்னல் ஜங்ஷனாக மேம்படுத்தப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அல் டையர் தெரிவித்துள்ளார்.

தெரு விளக்குகள், மழைநீர் வடிகால் அமைப்பு (rain water drainage system), திசை அறிகுறிகள் (directional signs) மற்றும் சாலை பாதுகாப்புக்கான பாதுகாப்பு பணிகள் ஆகிய பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!