அமீரக செய்திகள்

UAE: துபாய் விமான நிலையத்தில் ஸ்மார்ட் கேட்களை பதிவு செய்து தாமதத்தை தவிர்க்குமாறு பயணிகளுக்கு அறிவுரை..!

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு சுமார் ஆறு மில்லியன் பயணிகள் ஸ்மார்ட் கேட்கள் வழியாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் கூட்ட நெரிசலில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க ஸ்மார்ட் கேட் மூலம் பதிவு செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நுழைவாயில்களில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன பயோமெட்ரிக் அமைப்புகள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அழுத்தத்தை குறைத்துள்ளன. மாதத்திற்கு ஒரு மில்லியன் பயணிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விமான நிலையம் முழுவதும் அமைந்துள்ள 122 ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன்படி, இதுவரை இந்த ஆண்டு ஸ்மார்ட் கேட் வசதிகளை சுமார் 6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கர்னல் பைசல் அல் நுஐமி, GDRFA-துபாயில் விமான நிலைய செயல்பாடுகளுக்கான துணை இயக்குனர் கூறுகையில்,  துபாய் விமான நிலையத்தின் வெவ்வேறு பயணிகளின் அடையாள ஆவணங்களை சோதிப்பதில் சில நேரங்கள் ஆகும். ஆனால் ஸ்மார்ட் கேட்கள் வசதிகள் மூலம் பல பயணிகள் நேரம் கணிசமாக குறைந்துள்ளது.

“இந்த ஆண்டு சுமார் ஆறு மில்லியன் பயணிகள் ஸ்மார்ட் கேட்களை பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு 122 ஸ்மார்ட் கேட்களிலும் பயோமெட்ரிக் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 5 வினாடிகளுக்குள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு நடைமுறைகளை முடிக்க பயணிகளை அனுமதிக்க உதவுகிறது. பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 8 வினாடிகளுக்குள் சோதனையை முடித்து கடந்து செல்லலாம்” என்று பைசல் அல் நுஐமி கூறினார்.

மேலும் கூறிய அவர், “இந்த ஆண்டு இதுவரை, துபாய் சர்வதேச விமான நிலையம் 19.7 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. சுமார் 1.6 மில்லியன் பயணிகள் வருகையின்போதும் மற்றும் புறப்படும்போது 4 மில்லியன் பயணிகளும் ஸ்மார்ட் கேட்டை பயன்படுத்தியுள்ளனர். மேலும் கோடை மற்றும் விடுமுறை காலங்களில் ஒரு நாளைக்கு 125,000 பயணிகள் வருகைத்தருவார் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!