அமீரக செய்திகள்

துபாய் ஷேக்கின் ராட்சத ஹம்மர் மீண்டும் சமூக ஊடகங்களில் வைரல்..!! லிவிங் ரூம், பெட்ரூம் உள்ளிட்ட வசதிகளுடன் வழக்கமான மாடலை விட 3 மடங்கு பெரிய கார்..!!

துபாய் மில்லியனர் மற்றும் ஆட்டோமொபைல் ஆர்வலரான ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் அவர்களின், ராட்சத ஹம்மர் (Hummer) H1 X3 சாலையில் இருக்கும் மற்ற வாகனங்களை விட மிகப்பெரிய வாகனமாக ஓங்கி உயர்ந்து நிற்கும் பழைய வீடியோ மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த மிகப்பெரிய ஹம்மர் சுமார் 46 அடி நீளம், 21.6 அடி உயரம் மற்றும் 19 அடி அகலம் கொண்டது. மேலும், இதை நிர்வகித்த எமிராட்டி ராயல் குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஹமாத்தின் தனிப்பட்ட நெட் வொர்த் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

‘துபாயின் ரெயின்போ ஷேக்’ என்று அழைக்கப்படும் ஷேக் ஹமத், அவருக்குப் பிடித்த வாகனங்களை பிரம்மாண்டமான அளவுகளில் உருவாக்குவதில் ஈடு இணையற்ற ஆர்வம் கொண்டவர். இதற்கென தனது செல்வத்தின் ஒரு பகுதியை அவர் செலவிடுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவர் உருவாக்கிய ஒரு வாகனம் வழக்கமான மாடலை விட மூன்று மடங்கு பெரிய அளவிலான ஹம்மர் H1 ஆகும்.

தற்போது, மீண்டும் ட்விட்டரில் வைரலாகி வரும் வீடியோவில், பிரம்மாண்டமான ராட்சத ஹம்மருடன் சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்களைப் பார்க்கும்போது அவை குள்ளமாகத் தோன்றுகின்றன.

இவ்வளவு பெரிய ஹம்மர் வெறும் காட்சிக்காக மட்டுமல்ல. இது உண்மையில் முழுமையாக செயல்படும் மற்றும் நான்கு சக்கர இயக்கி திறன்களைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த காருக்குள் சில ஆச்சரியமான வசதிகளும் உள்ளன.

வாகனத்தின் உட்புறம் உண்மையில் ஒரு சிறிய வீட்டை ஒத்திருக்கிறது என்று கூறலாம். இதில் உள்ள இரண்டு தளங்களும் ஒரு லிவ்விங் ரூம், கழிப்பறை, இரண்டாவது மாடியில் ஸ்டீயரிங் கேபின் மற்றும் ஹோட்டல் போன்ற படுக்கையறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார் மீது அலாதி பிரியம் கொண்ட ராயல் குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத்திடம் சுமார் 3,000 வாகனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஷார்ஜாவில் இவரின் வாகனங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்று உள்ளது என்றும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கார்களில் மாபெரும் ஹம்மர் H1, உலகின் மிகப்பெரிய இயங்கும் ஜீப், உலகின் மிகப்பெரிய SUV மற்றும் பல உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஆட்டோமொபைல் மோகம் கொண்ட ஷேக் ஹமாத், 718 4×4 வாகனங்களை சேகரித்து வைத்திருப்பதாகவும், அதற்காக அவர் கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!