லைஃப் ஸ்டைல்

நீங்க அபுதாபியா..?? பார்பிக்யூ செய்ய ஆசையா..?? எந்தெந்த இடங்களில் அனுமதி தெரியுமா..??

வெறும் பாலைவனமாகவும் வருடத்தில் அதிகபட்சம் கோடைகாலமாகவும் காணப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் டிசம்பர் மாதம் துவங்கி ஒரு சில மாதங்களே நீடிக்கும். இந்த மாதங்களில் அமீரகத்தில் குடும்பங்கள், நண்பர்கள் ஒன்றிணைந்து இரவு நேரங்களில் பார்பிக்யூ (Barbecue) செய்வது வழக்கமான ஒன்றாகும்.

இருப்பினும் அமீரகத்தில் நாம் நினைக்கும் இடங்களில் சென்று இது போன்று பார்பிக்யூ செய்ய முடியாது. அமீரகத்தில் இதற்காகவே குறிப்பிட்ட சில இடங்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும்.

அதில் அபுதாபியில் மொத்தம் 40 பொதுப் பூங்காக்கள் குடியிருப்பாளர்களால் பார்பிக்யூ வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகத்தில், நகராட்சித் துறை கட்டுப்பாட்டு ஆணையம், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) பார்பிக்யூ செய்ய அனுமதிக்கப்படும் பூங்காக்களை பட்டியலிட்டுள்ளது. அதே நேரத்தில் இவற்றை பயன்படுத்தும்போது குடியிருப்பாளர்கள் கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அபுதாபியில், நியமிக்கப்படாத வெளிப்புறப் பகுதிகளில் உணவை தயாரிக்கவோ அல்லது சமைக்கவோ தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி குடும்பங்களும் நண்பர்களும் அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ரா பகுதி முழுவதும் பல நியமிக்கப்பட்ட பூங்காக்களில் பார்பிக்யூ செய்ய முடியும்.

கிரில்லிங் வசதிகளுடன் கூடிய பிரத்யேக பொது பூங்காக்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபி

  • கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் – பார்க் 1
  • கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் – பார்க் 2
  • கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் – பார்க் 4
  • கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் – பார்க் 5
  • ஷேக் சையத் ஸ்ட்ரீட்டில் உள்ள டால்பின் பார்க்
  • முரூர் சாலையில் உள்ள ஜாஃபரானா கார்டன்மு
  • பாரக் பின் முகமது ஸ்ட்ரீட் மற்றும் காலித் பின் வலீத் ஸ்ட்ரீட் இடையே உள்ள ஃபேமிலி பார்க்
  • அல் ஹோஸ்ன் ஸ்ட்ரீட் மற்றும் கலீத் பின் அல் வலீத் ஸ்ட்ரீட் இடையே உள்ள ஃபேமிலி பார்க்
  • சுல்தான் பின் சையத் ஸ்ட்ரீட் மற்றும் டெல்மா ஸ்ட்ரீட் இடையே இருக்கும் ஃபார்மல் பார்க்
  • அல் ஜாஹியா ஸ்ட்ரீட் மற்றும் மினா சயீத் இடையே உள்ள ஹெரிடேஜ் பார்க்
  • அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட் மற்றும் அல் பதீன் தெரு இடையே இருக்கும் அல் சஜி கார்டன்ஸ்
  • அல் பதீன் ஸ்ட்ரீட் மற்றும் அல் யஸ்வா ஸ்ட்ரீட் இடையே அல் பௌம் கார்டன்
  • அல் யஸ்வா ஸ்ட்ரீட் மற்றும் அல் மகர் ஸ்ட்ரீட் இடையே நோஃபல் பார்க்
  • ரப்தான் பகுதியில் உள்ள ரப்தான் பார்க்
  • கலீஃபா நகரில் உள்ள கலீஃபா பார்க்
  • அல் வத்பாவில் உள்ள அல் வத்பா பார்க் மற்றும் கார்டன்
  • அல் காதிமில் உள்ள அல் காதிம் பார்க்
  • அல் அட்லா நகரில் அல் அட்லா பார்க்
  • அல் ஷம்காவில் உள்ள அல் காதி பார்க்
  • அல் ஷம்காவில் உள்ள அல் பல்ராக் பார்க்
  • அல் ஷம்காவில் உள்ள அல் பராஜீல் கார்டன்
  • அல் ஷம்காவில் உள்ள அல் ஃபானஸ் கார்டன்
  • யாஸ் தீவில் உள்ள கேட் பார்க்

அல் அய்ன்

  •  அல் சலாமத்தில் உள்ள அல் சலாமத் ஃபேமிலி பார்க்
  • அல் குவாவில் உள்ள அல் குவா ஃபேமிலி பார்க்
  • நஹிலில் இருக்கும் நஹில் பார்க்
  • அல் ஜிமியில் உள்ள முரைஜிப் பார்க்
  • அல் மோதாரிதில் உள்ள அல் சுலைமி பார்க்
  • அல் ஹேயரில் உள்ள அல் ஹேயர் பார்க்
  • அல் ஷ்வைபில் இருக்கும் அல் ஷ்வைப் பார்க்
  • அல் கஸ்னாவில் உள்ள அல் கஸ்னா பார்க்
  • ரெமாவில் உள்ள ரெமா ஃபேமிலி பார்க்
  • அல் ஃபகாவில் உள்ள அல் ஃபக்கா பார்க்
  • அல் ஃபோஹ்வில் உள்ள அல் ஃபோஹ் ஃபேமிலி பார்க்
  • அல் ஹேயரில் உள்ள அல் ஹேயர் என்டர்டெய்மெண்ட் பார்க்
  • கிரீன் முபஸ்ஸாராவில் உள்ள கிரீன் முபஸ்ஸாரா பார்க்

அல் தஃப்ரா பகுதி

  •  மதீனத் சையதில் உள்ள சையத் பப்ளிக் பார்க்
  •  அல் கயாதி சிட்டியில் உள்ள நார்த்தன் கார்டன்
  • அல் மர்ஃபாவில் உள்ள அல் மர்ஃபா தேஷனல் பார்க்
  • அல் சிலாவில் உள்ள அல் சிலா பப்ளிக் பார்க்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!