அமீரகத்தில் திறக்கப்படும் மிகப்பெரிய சஃபாரி பார்க்…!! செயல்படும் நேரம், டிக்கெட் விலை என்ன..??
அமீரகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷார்ஜா சஃபாரி பார்க் நாளை பிப்ரவரி 17 முதல் திறக்கப்படவுள்ளது. ஆப்பிரிக்காவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய சஃபாரி பார்க் என்று கூறப்படும், இது ஷார்ஜாவின் அல் தைத் (al dhaid) அருகே கட்டப்பட்டுள்ளது. 120 வகையான விலங்குகள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மரங்களின் தாயகமாக விளங்கும் இந்த சஃபாரி பார்க் 8 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
டிக்கெட் கட்டணங்கள்
>> ப்ரோன்ஸ் டிக்கெட் (நடைபயணம்)
- 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 திர்ஹம் மற்றும் 3-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 15 திர்ஹம் கட்டணம்.
- சுற்றுப்பயணத்தின் காலம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆகும்.
- ஆப்பிரிக்கா ஜோன் (zone) மட்டும் அனுமதி
>> வெள்ளி டிக்கெட்டுகள்
- 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 120 திர்ஹம் மற்றும் 3-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 50 திர்ஹம்.
- இது ஒரு வழக்கமான பேருந்தில் ஒரு இருக்கையை ஒதுக்குகிறது.
- சுற்றுப்பயணத்தின் காலம் ஐந்து முதல் ஆறு மணி நேரம்.
- இது ‘செரெங்கேட்டி (Serengeti)’ என்று அழைக்கப்படும் ஒரு பகுதியைத் தவிர அனைத்து ஷார்ஜா சஃபாரி சூழல்களுக்கும் டிக்கெட் வைத்திருப்பவர்களை அழைத்துச் செல்கிறது
>> கோல்டன் டிக்கெட்டுகள்
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe- 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 275 திர்ஹம் மற்றும் 3-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 120 திர்ஹம்.
- சுற்றுப்பயணத்தின் காலம் ஐந்து முதல் ஆறு மணி நேரம்.
இது ஒரு சொகுசு வாகனத்தில் ஒரு இருக்கையை ஒதுக்குகிறது. இது தனிப்பட்ட வழிகாட்டியுடன் அனைத்து ஷார்ஜா சஃபாரி சூழல்களுக்கும் டிக்கெட் வைத்திருப்பவர்களை அழைத்துச் செல்கிறது.
ஆறு நபர்கள் சொகுசு வாகனத்தில் பயணிக்க 1,500 திர்ஹம், ஒன்பது பேருக்கு சொகுசு வாகனத்தில் பயணிக்க 2,250 திர்ஹம் மற்றும் 15 பேருக்கு சொகுசு வாகனத்தில் பயணிக்க 3,500 திர்ஹம் ஆகும்.
>> செயல்படும் நேரங்கள்
- காலை 8.30 முதல் மாலை 6.30 வரை
- கோல்ட் மற்றும் சில்வர் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மதியம் 2 மணி வரை மட்டுமே உள்நுழைய அனுமதி வழங்கப்படும்.
- ப்ரோன்ஸ் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மாலை 4 மணி வரை உள்நுழைய அனுமதி வழங்கப்படும்.