லைஃப் ஸ்டைல்

UAE: திறப்பதற்கு தயாரான உலகின் மிக அழகான அருங்காட்சியகம் ‘மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர்’… தேதியை வெளியிட்ட துபாய் மன்னர்..!!

உலகளவில் நவீன கட்டிடக்கலைக்கு பெயர்போன அமீரகத்தில் தொடர்ந்து இப்படியெல்லாம் கட்டிடம் இருக்க முடியுமா என்று நினைக்கும் அளவிற்கு எண்ணிலடங்கா வித்தியாசமான கட்டிடங்கள் கட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன் வரிசையில் பார்ப்போர் வியக்கும் வண்ணம் நீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அருங்காட்சியகமானது சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது.

உலகின் மிக அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றான துபாயில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பிற்காக காத்திருக்கும் இந்த அருங்காட்சியகம் “மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர்” வரும் பிப்ரவரி 22, 2022 அன்று பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் இந்த மியூசியத்தின் சில அற்புதமான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். இந்த அருங்காட்சியகத்தை பூமியின் மிக அழகான கட்டிடம் என்று அழைத்த ஷேக் முகமது அவர்கள், 2022 ஆம் ஆண்டு, கடவுள் விரும்பினால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மற்றுமொரு சிறந்த ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 2021 ஆம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபிக் பட்டியலிடப்பட்ட உலகின் மிக அழகான 14 அருங்காட்சியகங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!