அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் பணிபுரிய ஆஃபர் லெட்டர் இருக்கா..?? அது உண்மையா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது எப்படி..??

பொதுவாகவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று வேலை செய்ய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். பலர் தங்களின் குடும்ப வருவாய்க்காக வேண்டி அமீரகம் வந்து பணிபுரிகின்றார்கள். இன்னும் சிலர் எப்படியாவது அமீரகத்தில் ஒரு வேலை கிடைத்து விட வேண்டும் என முயற்சி செய்தும் வருகின்றனர்.

இவ்வாறு அமீரகத்தில் வேலை கிடைப்பதற்காக கடுமையாக முயற்சித்து வரும் நபர்களை குறிவைத்து சில மோசடி நபர்கள் பொய்யான வேலை ஒப்பந்தத்தை தயார்செய்து விடுகிறார்கள். இதனை நம்பி அமீரகம் வருபவர்கள் தங்களின் பணத்தை இழந்து வேலை இல்லாமலும் கையில் பணம் இல்லாமலும் திண்டாட வேண்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கான ஆஃபர் லெட்டரை நீங்கள் பெற்றிருந்தால், அந்த வேலை வாய்ப்பு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது என்றும் அதற்கான வழிமுறைகளையும் அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

நீங்கள் வேலை மோசடிக்கு ஆளாகாமல் இருக்க விரும்பினால் மற்றும் ஆஃபர் லெட்டர் என கூறப்படும் வேலை கிடைத்ததற்கான கடிதம் முறையானது என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், MOHRE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் – mohre.gov.ae மூலம் நம்பகத்தன்மையைக் கண்டறியலாம்.

ஒரு நிறுவனம் சட்டப்பூர்வமாக இருந்தால், ஆஃபர் லெட்டரின் செல்லுபடியை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை மோசடியைத் தவிர்ப்பது எப்படி என்பதற்கான உதவிக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆஃபர் லெட்டரில் என்ன இருக்கும்?

MOHRE இன் படி, அமீரகத்தில் உங்களுக்கு வேலை வழங்கப்பட்டால், வேலைக்கான ஆஃபர் லெட்டரானது அமைச்சகத்தால் வழங்கப்பட வேண்டும் மற்றும் பின்வரும் தகவலை உள்ளடக்கியிருக்க வேண்டும்:

– ஒப்பந்த வகை

– சம்பளம் (மாதாந்திர, தினசரி, அல்லது கமிஷன்கள்…. போன்றவை)

– வாராந்திர விடுப்பு இருப்பு (Weekly leave balance)

– நோட்டீஸ் பீரியட் மற்றும் பிற நிபந்தனைகள்.

– தொடக்க நாள்

– வேலை விபரம்

– நிறுவனத்தின் எண்

வேலை வாய்ப்பு கடிதத்திற்கு தேவையான ஆவணங்கள்

MOHRE இன் படி, MoHRE இலிருந்து ஆஃபர் லெட்டர் வழங்குவதை உறுதிசெய்ய, பின்வரும் ஆவணங்களை முதலாளி சமர்ப்பிக்க வேண்டும்: 

– பாஸ்போர்ட்டின் சரியான நகல் (ஆறு மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் தேதி கொண்டிருக்க வேண்டும்)

– அசல் மின்-கையொப்ப அட்டை (Original E-Signature Card) (உரிமையாளர்/அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவர்)

– கார்டின் நகல் (MOHRE இல் உள்ள நிறுவனக் குறியீட்டை தெளிவுபடுத்த)

 – அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள், நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்த வகை உள்ளிட்ட சம்பள விவரங்கள்.

– வேலை அனுமதியை பரிமாற்றம் செய்யவிருந்தால் பணி அனுமதி ரத்து செய்யப்பட்ட நகல் (90 நாட்களுக்கு குறைவான தேதி).

எனது வேலை வாய்ப்பு சரியானதா என்பதை நான் எப்படி அறிவது?

நீங்கள் அமீரக வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், உங்கள் நாட்டில் உள்ள அமீரக தூதரகத்திற்குச் சென்று செல்லுபடியை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் MOHRE இன் ஆன்லைன் விசாரணை சேவை (online enquiry service) மூலம் முதலாளியின் செல்லுபடியை சரிபார்ப்பது மற்றொரு முறையாகும்.

வேலை வாய்ப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே:

படி 1: mohre.gov.ae வலைதளம் செல்லவும். அதில் மெனு சென்று சேவைகளைக் கிளிக் செய்யவும். நீங்கள் சேவைகளைக் (services) கிளிக் செய்தவுடன், கீழ்தோன்றும் மெனுவிற்குச் சென்று விசாரணை சேவைகளைத் (enquiry services) தேர்ந்தெடுக்கவும்.

படி 2: விசாரணை சேவைகளைக் கிளிக் செய்து அதில், ‘வேலை வாய்ப்புக்கான விசாரணை’ (enquiry for job offer) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 3: அதன்பின்னர் உங்கள் வேலை வாய்ப்பு கடிதத்தை சரிபார்க்க நீங்கள் வேலை வாய்ப்பு விவரங்களை அதில் நிரப்ப வேண்டும்:

– பரிவர்த்தனை எண்

– நிறுவனத்தின் எண்

– தேதி (from date)

– தேதி (to date)

– அனுமதி வகை (நீங்கள் ஒரு பணியாளராக இருந்தால், வேலை வாய்ப்பின் செல்லுபடியை சரிபார்த்து, ‘அனைத்து பணி அனுமதிகளையும்’ தேர்வு செய்யவும்)

நீங்கள் இந்த தகவலை நிரப்பியதும், submit என்பதைக் கிளிக் செய்யவும். இது உண்மையானதாக இருந்தால், MOHRE ஆல் அங்கீகரிக்கப்பட்ட கடிதத்தை நீங்கள் ஆன்லைனில் பார்க்க முடியும்.

இது ஒரு மோசடியான வேலை வாய்ப்பு மற்றும் கடிதம் MOHRE இல் பதிவு செய்யப்படவில்லை என்றால், வேலை வாய்ப்பு அமைப்பில் கிடைக்காது.

பரிவர்த்தனை எண் என்றால் என்ன?

பெரும்பாலான வேலை வாய்ப்பு கடிதங்களில் நிறுவனத்தின் எண் மற்றும் பரிவர்த்தனை எண் ஆகியவை கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நிறுவனங்கள் மற்றும் ஆட்சேர்ப்பு ஏஜென்சிகள் வேலைக் கடிதத்தை MOHRE இல் பதிவேற்ற வேண்டும், அதை பதிவேற்றியவுடன், இந்த பரிவர்த்தனை எண்ணைப் பெறுவார்கள். வருங்கால ஊழியர் இந்த தகவலை முதலாளியிடம் கேட்க வேண்டும்.

நிறுவனம் உண்மையானதா என்பதை நான் எப்படி அறிவது?

நிறுவனம் சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் உரிமம் பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் நிறுவனத்தின் ஆங்கிலம் மற்றும் அரபு பெயர்களை தேசிய பொருளாதாரப் பதிவேட்டில் (NER) தேடலாம் மற்றும் நிறுவனத்தின் விவரங்களைப் பெறலாம்.

நிறுவனம் உண்மையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. முதலில், https://ner.economy.ae/ என்ற தளத்திற்கு செல்லவேண்டும்

2. மெனு சென்று, ‘Inquiry Business License’ என்பதைக் கிளிக் செய்து, ‘Inquiry by business name’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அடுத்து, வணிக நிறுவன பெயரை அரபு மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி, கேப்ட்சா சரிபார்ப்பை நிரப்பவும்.

4. Inquiry என்பதைக் கிளிக் செய்யவும்.

அமீரகத்தில் நிறுவனத்தின் தற்போதைய பொருளாதார உரிமம் குறித்த துல்லியமான மற்றும் விரிவான தரவு உங்களுக்கு பின்னர் வழங்கப்படும்.

தேசியப் பொருளாதாரப் பதிவு என்றால் என்ன?

தேசிய பொருளாதாரப் பதிவேடு (NER) என்பது அரசாங்கத்தின் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டாட்சி மின்னணு வடிவமாகும். மேலும் இது பொருளாதார அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகிறது. அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான u.ae இன் படி, தற்போதுள்ள பொருளாதார உரிமங்கள், தரவு, புள்ளிவிவரங்கள், செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் பற்றிய உடனடி, துல்லியமான மற்றும் விரிவான தகவல்களைப் பெற NER, அரசாங்க நிறுவனங்கள், வணிகர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது.

வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்ட பிறகு நான் எப்படி ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைவது?

1. u.ae இன் படி, விண்ணப்பதாரர் அமீரகத்திற்கு வெளியே இருக்கும் போது யாருக்கும் ரெசிடென்ஸி விசாவை செயல்படுத்த முடியாது. விண்ணப்பதாரர் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் entry permit மூலம் நாட்டிற்குள் நுழைந்தால் மட்டுமே ரெசிடென்ஸ் விசா வழங்க முடியும்.

2. நீங்கள் ஆஃபர் லெட்டரில் கையொப்பமிட்ட பிறகு, அமீரகத்திற்குள் நுழைவதற்கான வேலைவாய்ப்பு விசாவை முதலாளி உங்களுக்கு அனுப்புவார்.

ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் சட்டத்தின்படி ஆட்சேர்ப்புசக்கான செலவினங்களைச் செலுத்துவதற்கு ஸ்பான்சர் (முதலாளி) பொறுப்பேற்கிறார் என்பதையும், அவ்வாறு செய்யத் தவறும் முதலாளிகள் கடுமையான அபராதங்களை எதிர்கொள்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

3. icp.gov.ae வழியாக அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா அல்லது ஃபுஜைராவிலிருந்து வழங்கப்பட்ட நுழைவு அனுமதி/விசாவின் (entry permit/visa) செல்லுபடியை சரிபார்க்கலாம்.

உங்களிடம் துபாயில் இருந்து நுழைவு அனுமதி/விசா வழங்கப்பட்டிருந்தால், www.gdrfad.gov.ae மூலம் அதன் செல்லுபடியை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

விசிட் விசாவில் வேலை செய்யலாமா..??

விசிட் அல்லது சுற்றுலா நுழைவு அனுமதி/விசாவானது அமீரகத்தில் வேலை செய்வதற்கான உரிமையை உங்களுக்கு வழங்காது.

விசிட் விசாவில் பணிபுரியும் நபர்கள் அரசால் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள். அதில் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 திர்ஹம் வரை அபராதம் மற்றும் நாடுகடத்தல் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!