அமீரக செய்திகள்

பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 9 ஆண்டுகளாக முதன்மை வகிக்கும் துபாய் சர்வதேச விமான நிலையம்..!!

துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக சர்வதேச பயணிகள் போக்குவரத்திற்கான பரபரப்பான விமான நிலையமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 2022 ஆம் ஆண்டில் பயணிகளின் போக்குவரத்து அதிகமான மற்றும் பரபரப்பான விமான நிலையமாக DXB முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 2022 இல் துபாய் விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்து 66,069,981 ஆக பதிவாகியுள்ளது, இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 127 சதவீதம் அதிகமாகும். இது குறித்து துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் க்ரிஃபித்ஸ் அவர்கள் கூறுகையில், 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பயணிகள் போக்குவரத்தின் எழுச்சி காரணமாக மீண்டும் பட்டியலில் முதலிடம் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2022 இல் விமானப் பயணத்திற்கான தேவை உலகளவில் அதிகரித்திருந்தாலும், எங்கள் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஒவ்வொரு சேவை கூட்டாளரின் நுட்பமான திட்டமிடல் மற்றும் தயாரிப்பு ஆகியவை DXB ஐ வேறுபடுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் மற்ற முதல் 10 பரபரப்பான விமான நிலையங்கள் குறித்த தரவுகளை ACI வெளியிட்டுள்ளது. அவற்றில் இரண்டாவதாக லண்டனின் ஹீத்ரோ (58.243 மில்லியன் பயணிகள்), 52.46 மில்லியன் பயணிகளுடன் ஆம்ஸ்டர்டாம் மூன்றாவது இடத்திலும், பாரிஸ் (51.76 மில்லியன்), இஸ்தான்புல் (48.5 மில்லியன்), பிராங்பேர்ட் (44.77 மமில்லியன்), மாட்ரிட் (மில்லியன்), தோஹா (35.7 மில்லியன்), சிங்கப்பூர் (31.9 மில்லியன்) மற்றும் லண்டனின் கேட்விக் விமான நிலையம் (30.14 மில்லியன்) என்ற மாறுபட்ட எண்ணிக்கை விகிதத்தில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அதேசமயம், 2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் விமான நிலையம் சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் 952.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தரவுகள் கூறுகிறது. அதைத் தொடர்ந்து லண்டனின் கேட்விக் விமான நிலையம் (501.5 சதவீதம்), ஹீத்ரோ விமான நிலையம் (230.5 சதவீதம்), மாட்ரிட் (136.2 சதவீதம்), பாரிஸ் (128.9 சதவீதம்) சதவீதம்) மற்றும் துபாய் இன்டர்நேஷனல் (127 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளதாகவும் தரவுகளில்  வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!