அமீரக சட்டங்கள்

அமீரக கிரீன் விசா: 5 வருட ரெசிடென்ஸ் விசா பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்ட அமீரக அரசு..!!

வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு புதிய விசாக்களை அறிமுகப்படுத்தி வரும் ஐக்கிய அரபு அமீரகமானது அதில் ஒன்றாக திறமையாளர்கள், திறமையான தொழில் வல்லுநர்கள், ஃப்ரீலான்ஸர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஈர்ப்பதற்காக புதிய 5 வருட ரெசிடென்ஸி விசாக்களை அறிவித்துள்ளது.

இந்த விசாவின் கீழ் ரெசிடென்ஸி பெர்மிட் ரத்து செய்யப்பட்ட பிறகும் அல்லது காலாவதியான பிறகும் அமீரகத்தில் ஆறு மாதங்கள் வரை தங்குவதற்கான நீண்ட நெகிழ்வான சலுகைக் காலங்களை இந்தத் திட்டம் வழங்குகிறது.

மேலும் இது ஸ்பான்சர் அல்லது முதலாளி இல்லாமல் திறமையான ஊழியர்களுக்கு 5 வருட ரெசிடென்ஸியை வழங்குகிறது.

திறமையான ஊழியர்கள்

இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் வேலை ஒப்பந்தத்தை கொண்டிருக்க வேண்டும்.

மேலும் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தின் படி முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது தொழில் நிலைகளில் வகைப்படுத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்ச கல்வி நிலையானது இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும். அத்துடன் சம்பளம் 15,000 திர்ஹமிற்கு குறைவாக இருக்கக்கூடாது.

ஃப்ரீலான்ஸர்கள், சுயதொழில் செய்பவர்கள்

நெகிழ்வான பணி மாதிரிகளின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, இந்த திட்டம், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஸ்பான்சர் அல்லது வேலை வழங்குபவர் தேவையில்லாமல் ஐந்தாண்டு ரெசிடென்ஸியை வழங்குகிறது.

இதற்கு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்திடம் இருந்து ஃப்ரீலான்ஸ்/சுய வேலைவாய்ப்பு அனுமதி பெற வேண்டும்.

மேலும் இதற்கு விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்ச கல்வி நிலையாக இளங்கலை பட்டம் அல்லது சிறப்பு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் முந்தைய இரண்டு ஆண்டுகளில் சுயதொழில் மூலம் கிடைத்த ஆண்டு வருமானம் 360,000 திர்ஹமிற்கு குறைவாக இருக்கக்கூடாது.

முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்கள்

அமீரகத்தில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வணிக நடவடிக்கைகளை நிறுவும் அல்லது பங்குபெறும் முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு ரெசிடென்ஸியை வழங்குகிறது.

இந்த விசா பெறுவதற்கான தேவைகளில் முதலீட்டிற்கான ஒப்புதல் மற்றும் முதலீட்டிற்கான சான்று ஆகியவை அடங்கும். முதலீட்டாளர் (கூட்டாளி) ஒன்றுக்கு மேற்பட்ட உரிமங்களை வைத்திருந்தால், மொத்த முதலீடு செய்யப்பட்ட மூலதனம் கணக்கிடப்படும். அத்துடன் தகுதி வாய்ந்த உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலும் கட்டாயமாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!