அமீரக சட்டங்கள்

அமீரக வங்கியில் வாங்கிய கடனை அடைக்காமல் நாடு சென்றவர்கள் மீண்டும் அமீரகம் திரும்ப முடியுமா..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனை முழுமையாக அடைக்க முடியாமல் தவிர்க்க முடியாத காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறிய அமீரக குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகம் வர முடியுமா..? அலலது அவர்களுக்கு பயண தடை விதிக்கப்படுமா..? அல்லது அந்த கடனை திருப்பி அடைக்க என்ன செய்வது..? போன்ற கேள்விகளுக்கான பதில்களை நாம் இங்கே காண்போம்.

அமீரகத்தில் வசித்து வரும் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோனோர் தனது சொந்த தேவைக்காகவோ அல்லது கார் போன்ற தனிப்பட்ட வசதிக்காகவோ அமீரக வங்கிகளில் கடன் பெறுவது வழக்கமான ஒன்றுதான். எனினும், கடன் வாங்கியவர்களில் சிலருக்கு திடீரென வேலை இழப்பு போன்ற காரணத்தினால் வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியாமல் உடனடியாக சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் அமீரகத்தை விட்டு வெளியேறிய குடியிருப்பாளர்கள் மீண்டும் இந்த நாட்டிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா..? அல்லது அவர்களின் மேல் ஏதேனும் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளதா என்பது பற்றிய கேள்விகளுக்கு துபாயின் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களின் CEO டாக்டர் இப்ராஹிம் அல் பன்னா விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், கடனை அடைக்காமல் அமீரகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப திட்டமிட்டால், முதலாவதாக அவர்கள் ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில், யாருக்கு எதிராக கிரிமினல் அல்லது சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை வழக்கறிஞர்கள் சரிபார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிரிமினல் வழக்கு உள்ளதா என்பதைச் சரிபார்க்க, வழக்கறிஞருக்கு சம்பந்தப்பட்ட நபரின் பாஸ்போர்ட் நகல், தற்போதைய அல்லது முந்தைய அமீரக விசா மற்றும் தனிநபரிடமிருந்து கையொப்பமிடப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி ஆகியவை தேவைப்படும் எனவும், சிவில் வழக்குகளுக்கு உங்களால் அறிவிப்பு செய்யப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி, பாஸ்போர்ட் நகல் மற்றும் தற்போதைய அல்லது முந்தைய அமீரக விசாவைச் சமர்ப்பிக்க வேண்டும் கூறியுள்ளார். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே உள்ள நபர்களுக்கு நோட்டரி பொதுச் சேவைகள் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் அல் பன்னா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஃபெடரல் ஆணைச் சட்டம் எண். (14) 2020 ஆனது துபாயில் ஒரு கிரிமினல் வழக்கை மூடுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க எங்களுக்கு உரிமை அளிக்கிறது. வேறொரு எமிரேட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அந்த தீர்ப்பின் மீது நாங்கள் ஆட்சேபனை தாக்கல் செய்யலாம், குற்ற வழக்கு பதியப்பட்ட நபர் ஆன்லைனில் விசாரணையில் கலந்து கொள்ளலாம், அதன் மூலம் அவருக்கு வழக்கு முடிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சிவில் வழக்குகளில் குற்றம் பதியப்பட்ட அமீரக குடியிருப்பாளர்கள், நீதிமன்ற தீர்ப்பின்படி முழுத் தொகையையும் செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அல் பன்னா கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!