அமீரக சட்டங்கள்

துபாய், அபுதாபி இடையே இன்டர்சிட்டி பேருந்து சேவை மீ்ண்டும் துவக்கம்..!! கட்டணம், பேருந்து இயங்கும் நேரம் என்ன..?? முழுதகவல்களும் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெவ்வேறு எமிரேட்டுகளுக்கு இடையில் பயணம் செய்ய வேண்டுமா?? துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் ஃபுஜைரா இடையே மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நகரங்களுக்கு இடையேயான பேருந்து வழித்தடங்களைப் பயன்படுத்தி நீங்கள் வெவ்வேறு எமிரேட்டிற்கு பயணம் செய்யலாம். மே 19 முதல், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த எமிரேட்டுகளை இணைக்கும் நான்கு இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த எமிரேட்ஸுக்கு இடையே ஓடும் RTA பேருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் எமிரேட்டுகளுக்கு இடையில் பயணம் செய்யலாம். அதில் எப்படி பயணிப்பது மற்றும் அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை பற்றி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஃபுஜைரா இடையே RTA ஆல் மீண்டும் தொடங்கப்பட்ட நான்கு இன்டர்சிட்டி பேருந்து வழித்தடங்களின் விபரங்கள் பின்வருமாறு:

>> அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அபுதாபி மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் E100 பேருந்திற்கு துபாய் அல்லது அபுதாபியில் இருந்து நாள் முழுவதும்  செல்லலாம். பேருந்து சேவையானது 30 முதல் 40 நிமிட இடைவெளியில் கிடைக்கும். இதில் பயணிப்பதற்கான கட்டணம் 25 திர்ஹம்ஸ்  

>> அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து அல் அய்னுக்கு இயக்கப்படும் E201 பேருந்து சேவையில் துபாயில் இருந்து முதல் பேருந்து காலை 6.20 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 9.20 மணிக்கும் புறப்படும். அதேபோல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை இந்த பேருந்து சேவை கிடைக்கும். மேலும் அல் அய்னில் இருந்து துபாய்க்கு அதே பேருந்தில் செல்லலாம். இந்த சேவைக்கு முதல் பேருந்து காலை 6 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 9 மணிக்கும் புறப்படும். அத்துடன் மணிக்கு ஒருமுறை இந்த சேவை கிடைக்கும். இந்த பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 25 திர்ஹம்ஸ்.

>> E315 பேருந்து எடிசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜாவின் முவைலே பேருந்து முனையத்திற்கு இயக்கப்படும். முதல் பேருந்து காலை 5 மணிக்கும் கடைசி பேருந்து இரவு 11 மணிக்கும் புறப்படும். அத்துடன் இந்த பேருந்து சேவைகளானது ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் கிடைக்கும். ஷார்ஜாவிலிருந்து துபாய்க்கு இதே பேருந்தில் செல்லலாம். முதல் பேருந்து காலை 5.20 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 11 மணிக்கும் புறப்படும். அத்துடன் 20 முதல் 30 நிமிட இடைவெளியில் இந்த பேருந்து சேவை கிடைக்கும். இதற்கான பேருந்து கட்டணம் 12 திர்ஹம்ஸ்

>> E700 பேருந்து சேவையானது Etihad (Union) பேருந்து நிலையத்திலிருந்து ஃபுஜைராவிற்கு இயக்கப்படும். முதல் பேருந்து காலை 5.30 மணிக்கும், கடைசி பேருந்து நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும். கால அட்டவணையைப் பொறுத்து ஒன்று முதல் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை இந்த சேவை கிடைக்கும். ஃபுஜைராவிலிருந்து துபாய்க்கும் அதே பேருந்தில் செல்லலாம். முதல் பேருந்து காலை 5.24 மணிக்கும், கடைசி பேருந்து இரவு 10.54 மணிக்கும் புறப்படும். ஒவ்வொரு 20 முதல் 30 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த பேருந்து சேவை இருக்கும். இதற்கான பேருந்து கட்டணம் 25 திர்ஹம்ஸ்

மேலும் RTA இன் S’hail அப்ளிகேஷனில் உள்ள அட்டவணைபடி இந்த பேருந்து சேவைகள் இருக்கும். அந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேருந்து அட்டவணையைக் கண்டறிய S’hail அப்ளிகேஷனைப் பயன்படுத்துவது எப்படி?

ஒரு எமிரேட்டில் இருந்து வேறொரு எமிரேட்டுக்கு பேருந்தில் செல்ல திட்டமிட்டால், S’hail செயலியைப் பயன்படுத்துவது நல்லது, ஏனெனில் பயனர்கள் தங்கள் பயணத் திட்டத்தின்படி அவர்கள் செல்லக்கூடிய மிகவும் வசதியான வழியைத் தெரிவிக்க இது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. பேருந்து, மெட்ரோ, டிராம் அல்லது ஆப்ரா (அல்லது பிற கடல் போக்குவரத்து) போக்குவரத்து மூலம் அவர்கள் தங்கள் இலக்கை அடைவதற்கு எடுத்துச் செல்லக்கூடிய விவரங்களையும் இந்த ஆப் வழங்குகிறது. அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் பயணத்தைத் திட்டமிடுவது எப்படி என்பதை கீழே காணலாம்:

1. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டு மொபைல் சாதனங்களுக்கும் கிடைக்கும் ‘S’hail’ அப்ளிகேஷனைப் பதிவிறக்கவும்.

2. அப்ளிகேஷனுக்கு சென்று, உங்கள் தற்போதைய இருப்பிடத்தையும் நீங்கள் அடைய விரும்பும் இடத்தையும் தேர்ந்தெடுக்கவும். பெயரை உள்ளிடுவதன் மூலமோ அல்லது வரைபடத்தில் தேர்ந்தெடுப்பதன் மூலமோ நீங்கள் அவ்வாறு செய்யலாம்.

3. பிறகு, ஸ்க்ரீனின் வலது பக்கத்தில் உள்ள ‘settings’ ஐகானைக் கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுக்கவும். இன்டர்சிட்டி பேருந்து வழித்தடத்திற்கு, நீங்கள் ‘bus’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. பிறகு, புறப்படும் அல்லது வருகை நேரத்தைத் தேர்வுசெய்து, ‘search’ கொடுக்கவும்.

5. அதைத் தொடர்ந்து அப்ளிகேஷனில் உங்களின் விருப்பத்திற்கேற்ப பேருந்துகளுக்கான பட்டியல் காட்டப்படும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!