அமீரக செய்திகள்

UAE: பிளாஸ்டிக் பைகளுக்கு நாளை முதல் தடை.. மாற்று பைகளுக்கு இனி கட்டணம்..!!

அமீரகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அபுதாபி முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக அபுதாபி அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான இந்த தடையானது நாளை ஜூன் 1, 2022 முதல் அபுதாபி முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளது.

அபுதாபியின் ADQCC அங்கீகரித்த தொழில்நுட்ப தரநிலைகளின்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை தடையை அமல்படுத்துவதை கண்காணிக்க ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதற்காக சுற்றுச்சூழல் ஏஜென்சி – அபுதாபி (EAD) ஆனது, அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை (DED), மற்றும் அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) ஆகியவற்றின் ஆய்வாளர்களுக்கு பிளாஸ்டிக் தடை மீதான ஆய்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.

அபுதாபி முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் நுகர்வை படிப்படியாகக் குறைப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் கொள்கையை செயல்படுத்த திட்டமிட உதவும் தொலைநோக்கு திட்டங்களை இந்த பயிற்சி உள்ளடக்கியுள்ளது.

அபுதாபி அரசின் இந்த தடையினால் இனி அபுதாபியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று உபயோக பொருட்களை பயன்படுத்தும். எனினும் இந்த மாற்று உபயோக பொருட்களுக்கு விற்பனை நிலையங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும். இருப்பினும் மருந்துக் கடைகளில் உள்ள மருந்துப் பைகள், இறைச்சி, மீன், கோழி, தானியங்கள், ரொட்டி (நாட் பேக்குகள்) மற்றும் காய்கறிகளுக்கான பைகள் ஆகியவற்றுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஃபேஷன் அல்லது எலக்ட்ரானிக் கேஜெட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட பெரிய ஷாப்பிங் பைகள், பொம்மைகள், வெவ்வேறு அளவுகள் மற்றும் வகைகளின் கழிவுப் பைகள், செய்திகளை வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பைகள், தபால் பார்சல்கள் மற்றும் பத்திரிகைகள் அல்லது செய்தித்தாள்கள், தாவரங்கள், பூக்கள் மற்றும் சலவைகளை கொண்டு செல்வதற்காக நியமிக்கப்பட்ட பைகள் ஆகியவையும் இந்த தடையிலிருந்து விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பைகளும் விலக்கப்பட்டுள்ளன.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!