அமீரக செய்திகள்

அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம்? துபாய் கஸ்டம்ஸ் கூறுவது என்ன?

உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடத்தல் காரர்கள் மற்றும் சட்ட விதிகளை மீறும் பயணிகளை சோதித்து நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக சுங்கத் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். மேலும் பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து துபாய் கஸ்டம்ஸ் இணையதளம் மூலமாக பயணிகள் தெரிந்துக்கொள்ளலாம்.

அதில் அமீரகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகாள் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. அமீரகத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அமீரகத்திலிருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் 18 வயதிற்கு அதிகமாக பயணிகள் அனுமதியின்றி 60 ஆயிரம் திர்ஹம்ஸ் வரை பணம் எடுத்துச் செல்லலாம்.

மேலும் அதற்கு அதிகமான பணம் அல்லது நகை ஆகியவற்றை எடுத்துச் சென்றால் அதன் மதிப்பு குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும். 18 வயதிற்குக் குறைவான சிறுவர்கள் வைத்திருக்கும் பொருட்களின் மதிப்பு அவர்களது பாதுகாப்பாலரான தாய் அல்லது தந்தை கணக்கில் இணைக்கப்படும்.

கஸ்டம்ஸ் டியூட்டி வரி செலுத்தும் பட்டியல்:

  • 3 ஆயிரம் திர்ஹம்ஸ் மதிப்புள்ள தனிப்பட்ட உபயோகத்திற்கான பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.
  • விதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.
  • செல்லப் பிராணிகள், திரைப்பட கேமராக்களும் அது தொடர்புடைய உபகரணங்கள், பிரிண்ட்டர்கள், குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்ட கோழி மற்றும் பறவைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்ற கொண்டுசெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!