அமீரக செய்திகள்

அபுதாபியில் இருக்கைகள் கொண்ட இ-ஸ்கூட்டர்கள் பயன்படுத்த தடை.. சைக்கிள்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து மையம்..!

அபுதாபியில் இருக்கைகளுடன் கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் (DoT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமான (ITC) தெரிவித்துள்ளது.

அபுதாபி காவல்துறையுடன் இணைந்து ITC தொடங்கியுள்ள பைக் மற்றும் இ-ஸ்கூட்டர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட சைக்கிள்கள், எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான விதிமுறைகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அங்கீகரிக்கப்பட்ட மிதிவண்டிகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கக் கூடாது என்று ITC உத்தரவு விதித்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓட்ட அனுமதிக்கப்படும் இடங்களும், தவிர்க்க வேண்டிய இடங்களும்..

  • பொது சாலைகள், நெடுஞ்சாலைகள், நடைபாதைகளில் பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களை ஓட்டக்கூடாது.
  • பைக்குகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களை அனுமதிக்கப்பட்ட பகுதிகளில், வேக வரம்பு மணிக்கு 40 கி.மீ-க்கு மிகாமல் இருக்கும் வேண்டும்.
  • பைக், சைக்கிள் மற்றும் இ-ஸ்கூட்டர்-ஐ பெரிய பகுதிகளைக் கொண்ட பொதுப் பூங்காக்கள் போன்ற மூடிய பகுதிகளில் பயன்படுத்தலாம்.

வேகமும் வேண்டாம், முந்திச் செல்லவும் வேண்டாம்:

அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், முந்திச் செல்லுதல், விபத்துக்கள் போன்றவற்றை தவிர்த்து பொது மக்களிடம் இருந்து பாதுகாப்பு தூரத்தை கடைப்பிடிக்குமாறு ITC தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் இரவில் பாதுகாப்பு ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு ஜாக்கெட்டை அணிய வேண்டும். சைக்கிள் / இ-ஸ்கூட்டரில் வெள்ளை ஹெட்லைட் மற்றும் சிவப்பு நிற இரவு விளக்கு அல்லது சிவப்பு ரிஃப்ளெக்டரை பொருத்த வேண்டும்.

மேலும், பைக்குகள் / இ-ஸ்கூட்டர்களை ஆங்காங்கே நிறுத்தாமல், அதற்கென நியமிக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும் என்றும் ITC கூறியுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!